மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன தெரியுமா..?

Advertisement

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

வணக்கம் இந்த பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு எதை பற்றி கூறுகிறது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் நமது உடலுக்கு எதாவது  ஒரு பிரச்சனை என்றால் ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். மருத்துவரின் ஆலோசைகள் இல்லாமலும் மாத்திரை மருந்துகளை எடுத்து கொண்டு வருகிறோம். நாம் மருந்து கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை ஏதாவது ஒரு காரணத்திற்காக வாங்கி சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடும் போது இது என்ன மாத்திரை, இது எந்த பிரச்சனையை குணப்படுத்தும், இந்த மாத்திரை சாப்பிட்டால் நமது உடம்புக்கு நல்லதா என்று இதுபோல என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?

அதுமட்டுமின்றி இந்த மாத்திரைக்கு எத்தனை நாட்கள் வரை (Expiry Date) உள்ளது என்பதையாவது பார்த்திருக்கிறீர்களா..? அதுபோல நீங்கள் வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரை அட்டையிலும் ஒரு குறியீடு இருக்கும். அந்த குறியீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாங்க  நண்பர்களே அந்த குறியீடு பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ரனிதிதீன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை:

நம் நாட்டில் மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி மருந்துகளை கொள்முதல் செய்து வருகின்றது. அதுவே மாநில அரசு ரூ. 650 கோடிக்கும் மேலான மருந்துகளை கொள்முதல் செய்து வருகின்றது. அரசு பல நிறுவனங்களிடம் இருந்து தரமான மருந்துகளை கொள்முதல் செய்தாலும், அதிலும் சில காலாவதியான மருந்துகளும் இடம் பெறுகின்றன.

இதுபோன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு மத்திய அரசு கொள்முதல் செய்வதில் பல விதிமுறைகளை விதித்தது. அது மருந்து அட்டைகளில் பார்கோடு ( Barcode ) அதாவது, தனித்துவ அடையாளக் குறியீடுகளை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை மருந்து உற்பத்தியாளர்களுக்கு அறிக்கை விடுத்தது. அப்படி அச்சிடப்படும் குறியீடுகள் மக்களுக்கு ஒவ்வொரு தகவல்களை கூறுகிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

சிவப்பு நிற குறியீடு சொல்வது என்ன..? 

சிவப்பு நிற குறியீடு

மருந்து கடைகளில் இருக்கும் மாத்திரை அட்டைகளில் பெரும்பாலும் சிவப்பு நிற கோடு போடப்பட்டிருக்கும். இந்த சிவப்பு நிறக் கோடானது மருந்து அட்டையின் இடது புறத்தில் ஒரு ஓரமாக போட்டு இருப்பார்கள். இதற்கு காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

சிவப்பு நிறக் கோடுகள் போடப்பட்டிருக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்வதால் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை கூறுவதற்காக இந்த சிவப்பு நிறக் கோடுகள் அச்சிடப்படுகின்றன.

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள்

Rx குறியீடு என்ன கூறுகிறது..?

Rx குறியீடுகள்

 

இந்த Rx குறியீடுகள் உள்ள மருந்துகளை மருத்துவரின் அனுமதி இல்லாமல் விற்பனை செய்யமாட்டார்கள். மருத்துவர் எழுதி தந்த மருந்து சீட்டு இருந்தால் தான்  Rx  மருந்துகளை விற்பனை செய்வார்கள்.

NRx குறியீடு சொல்வது என்ன..? 

NRx

 

NRx என்பதை New Prescription என்று சொல்வார்கள். இந்த NRx வகை மருந்துகள் நம்மை கிளர்ச்சி ஊட்டும் போதை மருந்து தன்மையை கொண்டுள்ளன. இந்த மருந்துகளை Narcotic Drugs என்று கூறுகிறார்கள். இந்த NRx மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் தரமாட்டார்கள்.

XRx குறியீடு சொல்வது என்ன..?

இதுவும் கிளர்ச்சி ஊட்டக்கூடிய போதை மருந்து வகையை சார்ந்தது என்று கூறுகிறர்கள். பொதுவாக இந்த XRx மருந்துகள் புற்று நோயாளிகள், மனநோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த XRx மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நமக்கு தரமாட்டார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement