Fixed Deposit Meaning in Tamil..!
ஹலோ நண்பர்களே… இன்றைய பதிவில் Fixed Deposit பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். Fixed Deposit என்பது நிலையான அல்லது நிரந்தர வைப்பு தொகை என்று கூறலாம். பிக்சட் டெபாசிட் என்பது வங்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த முறையாகும். இந்த பதிவின் மூலம் பிக்சட் டெபாசிட் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன?
பிக்சட் டெபாசிட் என்றால் என்ன..?
Fixed Deposit என்பதை நிலையான வைப்பு தொகை என்று கூறுகிறோம். நிலையான வைப்பு தொகை என்பது சேமிப்புகளை பாதுகாக்கவும் மற்றும் சேமிப்புகளை வளர்ப்பதற்கும் வங்கியில் பயன்படுத்தப்படும் ஒரு நம்பகமான முதலீட்டு கருவியாகும்.
வங்கி முதலீடுகளில் ஒன்றாக பிக்சட் டெபாசிட் தான் விளங்குகிறது. இந்த பிக்சட் டெபாசிட் என்பதை பண முதலீட்டு திட்டம் என்று கூறலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட வட்டியை தரும் ஒரு முறை தான் பிக்சட் டெபாசிட்.
பொதுவாக இந்த பிக்சட் டெபாசிட்டில் 2 வகைகள் உள்ளன.
- நிலை வைப்புக் கணக்குகள் (Fixed Deposits)
- கூட்டு முதலீட்டு கணக்குகள் (Cumulative / Reinvestment Plan).
இந்த இரண்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இதுபோன்ற கணக்குகளில் வட்டி விகிதம் சேமிப்புகளை விட அதிகமாக இருக்கும். இதுபோன்ற முறை ஒவ்வொரு வங்கியின் நிதி நிறுவனத்தை பொறுத்து மாறுபடுகிறது.
பிக்சட் டெபாசிட் விவரங்கள்:
- இந்த பிக்சட் டெபாசிட் என்பதை ஒரு நிலையான வட்டி விகிதத்தில் உங்களின் சேமிப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு கருவியாகும்.
- அதேபோல நீங்கள் பிக்சட் டெபாசிட் மூலம் சேமிக்கும் அந்த தொகையை கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்கு முன் திரும்ப பெற முடியாது. அப்படி நீங்கள் திரும்ப பெற வேண்டும் என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
- இந்த பிக்சட் டெபாசிட் மூலம் வட்டி பெறுவதை நம் விருப்பத்தின் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
- சில வங்கிகளில் இந்த முறையின் மூலம் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்குகின்றன.
- இந்த பிக்சட் டெபாசிட் முறையில் ஒருவர் 2 கோடி ரூபாய் நிதியை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
- இந்த பிக்சட் டெபாசிட்-ல் முதலீடு செய்யும் தொகைக்கு நல்ல வட்டி கிடைக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |