விடுகதைகள் | Vidukathaigal

Advertisement

தமிழ் விடுகதை மற்றும் விடைகள் – Tamil Vidukathaigal

விடுகதைகள் என்பது பொதுவாக யோசிக்கும் திறனை அதிகரிக்க உதவும் ஒரு விளையாட்டாகும். குறிப்பாக இந்த விளையாட்டில் ஓரிரு வார்தைகளை மறைத்து புதிராக கேட்கப்படும் கேள்விதான் விடுகதை. விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் இம்மாதிரியான விடுகதை வினா விடை விளையாட்டுகள் பல இடங்களில் விளையாடப்படுகிறது. சரி இந்த பதிவில் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் பலவகையான விடுகதைகளும் அதற்கான விடைகளையும் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

விடுகதைகள் மற்றும் விடைகள்

1 நான் காற்றை போன்று எடை இல்லாதவன் ஆனால் நான் இருந்தால் எடை குறையும் நான் யார்?

விடை: ஓட்டை.

2 நீ அழுதால் நான் அழுவேன், நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நான் யார்?

விடை: கண்ணாடி.

3 காலால் தண்ணீர் குடித்து, தலையால் முட்டையிடுவான் அவன் யார்?

விடை: தென்னைமரம்.

4 மிருகங்கள் இல்லாத காடு எது?

விடை: முக்காடு.

5 அவனை தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை பறிப்பான் அவன் யார்?

விடை: மின்சாரம்.

6 சுடாத இரட்டை குழல் துப்பாக்கி, அது என்ன?

விடை: மூக்கு

7 கவசத்துடன் பிறந்தவன் நான் ஆனால் கர்ணன் அல்ல நான் யார்?

விடை: ஆமை.

8 அவன் வந்தாலும் பிரச்சனை, அவன் வரவில்லை என்றாலும் பிரச்சனை அவன் யார்?

விடை: மழை.

9 ராஜா உண்டு, ராணி உண்டு, ஏன் மந்திரியும் உண்டு ஆனால் நாடு இல்லை அது என்ன?

விடை: சீட்டு கட்டு.

10. மெல்ல மெல்ல செல்லும் ஆனால் கீழே வராது அது என்ன?

விடை: வயது.

11 இது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது ஆனால் உங்களை தவிர மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள் அது என்ன?

விடை: உங்கள் பெயர்.

12. உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது, ஆனால் தண்ணீரில் போட்டால் செத்துவிடும் அது என்ன?

விடை: காகிதம்.

13. இளமையில் இது நீளமாக இருக்கும், ஆனால் வயதானால் சுருங்கிவிடும் அது என்ன?

விடை: மெழுகுவர்த்தி 

14. ராணியின் அம்மாவிற்கு 4 குழந்தைகள் அவர்கள் தருண், வருண், அருண் மற்றும் —–?

விடை: ராணி 

15. எத்தனை முறை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?

விடை: மின்விசிறி.

16. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு நான் யார்?

விடை: நாணயம் 

17. கண்ணில்லாத எனக்கு அழமுடியும் ஆனால் பார்க்க கூடியது நான் யார்?

விடை: மேகம்.

18. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப்பலகை அது என்ன?

விடை: நாக்கு.

19. மழையில் வளர்ந்து வெயிலில் கிடக்கிறான் அவன் யார்?

விடை: காளான்.

20. எல்லோருக்கும் கிடைக்காத மதி, ஆனால் எல்லோரும் விரும்பும் மதி அது என்ன?

விடை: நிம்மதி.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement