தமிழ் பழமொழிகள் 1000 | 1000 Tamil Proverbs

1000 Tamil Proverbs

Tamil Proverbs 

அனைவரது வாழ்க்கையிலும் நல்வழியில் செல்ல அவசியம் தினமும் ஒரு பழமொழியை படியுங்கள். அடித்து உங்களை நல் வழியில் அழைத்து செல்லும். மேலும் உங்களை நல்ல ஒழுக்கமுடையவர்களாக மாற்றும். இங்கு அனைவருக்கும் பயன்படும் வகையில் 1000 தமிழ் பழமொழிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக படிக்கலாம் வாருங்கள்.

தமிழ் பழமொழிகள் 1000:

 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
 • அகல உழுகிறதை விட ஆழ உழு.
 • அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
 • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
 • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
 • அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கில் அமுதமும்.
 • அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
 • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
 • அடியாத மாடு பாடியது.
 • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
 • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
 • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத நாடு.
 • அருமையற்ற வீட்டில் எருமையும் குடி இருக்காது.
 • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன?
 • அழுகின்ற ஆணையும், சிரிக்கின்ற பெண்ணையும் நம்பக்கூடாது.
 • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
 • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
 • அறச் செட்டு முழு நட்டம்.
 • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
 • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பயில்லை.
 • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
 • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
 • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
 • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
 • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

1000 Tamil Proverbs:

 • ஆக்க பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
 • ஆடையிலாதவன் அரை மனிதன்.
 • ஆனை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
 • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
 • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
 • ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறிதி.
 • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
 • ஆழமறியாமல் காலை இடத்தே.
 • ஆற்றில் ஒரு கால் சேற்றி ஒரு கால்.
 • ஆனைக்கும் அடி சறுக்கும்.
 • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
 • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 • ஆனை கருத்தால் ஆயிரம் பொன்.
 • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
 • தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.
 • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
 • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
 • தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்.
 • நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
 • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
 • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
 • ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம்.
 • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
 • நாவு அசைய , நாடு அசையும்.

தமிழ் பழமொழிகள் 1000:

 • உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
 • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
 • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
 • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
 • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
 • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
 • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
 • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
 • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
 • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
 • அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்.
 • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
 • எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
 • உடல் ஒருவனுக்கு பிறந்தது, நாக்கு பலருக்கு பிறந்தது.
 • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
 • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
 • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
 • கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
 • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
 • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.

Tamil Proverbs 1000:

 • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
 • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
 • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
 • நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
 • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
 • குரங்கின் கைப் பூமாலை.
 • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
 • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
 • பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
 • கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
 • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
 • நாய் விற்ற காசு குரைக்குமா?
 • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
 • நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
 • பல துளி பெருவெள்ளம்.
 • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
 • குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
 • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
 • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

தமிழ் பழமொழி:

 • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
 • சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.
 • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
 • தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
 • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
 • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
 • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
 • வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
 • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
 • மாரடித்த கூலி மடி மேலே.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
 • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
 • தனி மரம் தோப்பாகாது.
 • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
 • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
 • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
 • வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
 • ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
 • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
 • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

1000 Tamil Proverbs With Meaning

 • மவுனம் கலக நாசம்.
 • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
 • ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால், உடனே கொடுக்கும் பலன் (உதய்).
 • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
 • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
 • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
 • பசியுள்ளவன் ருசி அறியான்.
 • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
 • கீர்த்தியால் பசி தீருமா?
 • ஆரால் கேடு, வாயால் கேடு.
 • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
 • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
 • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
 • எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு.
 • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
 • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
 • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
 • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
 • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
 • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

தமிழ் பழமொழிகளின் பட்டியல்

 • முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .
 • கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
 • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
 • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
 • இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
 • நுணலும் தன் வாயால் கெடும்.
 • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
 • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
 • உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன்?
 • கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
 • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
 • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
 • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
 • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
 • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
 • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
 • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
 • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
 • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
 • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

தமிழ் கிராமத்து பழமொழிகள்:

 • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
 • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
 • வானம் சுரக்க , தானம் சிறக்கும்.
 • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
 • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
 • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
 • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
 • கைய பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
 • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
 • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
 • நோய்க்கு இடம் கொடேல்.
 • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
 • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
 • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
 • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
 • உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய்
 • அலைகிறதுபோல்.
 • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
 • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
 • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
 • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

தமிழ் பழமொழிகள் pdf:

 • நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
 • அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
 • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
 • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
 • வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ? வீட்டுக்கு செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
 • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
 • கனிந்த பழம் தானே விழும்.
 • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
 • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
 • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
 • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
 • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
 • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
 • சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
 • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
 • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
 • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

50 பழமொழிகள் தமிழ்:

 • பக்கச் சொல் பதினாயிரம்.
 • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
 • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
 • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
 • நன்மை கடைப்பிடி.
 • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
 • முருங்கை பருத்தால் தூணாகுமா?
 • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
 • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
 • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? மீதூண் விரும்பேல்.
 • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
 • நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
 • தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
 • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
 • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
 • ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
 • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
 • மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
 • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

தமிழ் பழமொழிகள்:

 • மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
 • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
 • குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.
 • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
 • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
 • புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
 • நாலாறு கூடினால் பாலாறு.
 • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
 • கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
 • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
 • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
 • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
 • இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
 • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
 • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
 • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
 • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
 • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
 • இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
 • அறிய அறியக் கெடுவார் உண்டா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil