நீங்கள் பிரஸ் பண்ணும் போதும், டாய்லெட் போகும் போதும் இப்படி தான் செய்கிறீர்களா..!

தவறுகள் செய்வது மனித இயல்பு

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அன்றாட வாழ்க்கையில் செய்யும் 6 தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சில செயல்கள் முதலில் சரி என்று நினைத்து செய்வது பின்பு தவறாக முடியும். ஆனால் நீங்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் தவறுகள் இருக்கா என்று எப்போதாவது யோசித்து இருக்கீர்களா? ஆனால் நாம் தினமும் செய்யும் செயல்களில் கீழ் கொடுப்பட்டுள்ள 6 தவறுகளில் நீங்கள் ஏதாவது ஒன்றாவது செய்வீர்கள் வாங்க அது என்ன என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Uses of Toothbrush and Toothpaste in Tamil:

Uses of Toothbrush and Toothpaste in Tamil

காலையில் எழுந்ததும் முதலில் செய்கின்ற வேலை பல் துலக்குதல். நம்  முன்னோர்கள் எல்லாம் வேப்ப குச்சியை பயன்படுத்தி பல் துலக்கினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் Tooth Paste பயன்படுத்தி பல் துலக்குகிறோம். அந்த பேஸ்ட்டை Brush முழுவதும் வைத்து தானே பல் துலக்குகிறீர்கள். இந்த மாதிரி செய்வது தவறானது. Brush-ல்  சிறிதளவு பேஸ்ட் வைத்து தான் பல் துலக்க வேண்டும். அதிகளவு பேஸ்ட் பயன்படுத்தும் போது பல்லில் உள்ள எனாமல் குறைந்து பல் கூச்சம் ஏற்படும்.

டாய்லெட் கழிக்கும் முறை:

இன்றைய காலத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் போது நம் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக நீங்காதாம். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் போது கீழே ஒரு ஸ்டூல் வைத்து அதில் கால்களை வைத்து கழிவுகளை நீக்குங்கள். இந்த மாதிரி பயன்படுத்தும் போது Rectum-ல் அடைப்பு ஏற்படாது.

குளிக்கும் முறை:

குளிக்கும் முறை

தினமும் சில நபர்கள் வெந்நீரில் குளிப்பார்கள். அந்த வெந்நீரை கொதிக்க கொதிக்க குளிக்க கூடியவர்களும் இருப்பார்கள். நீங்கள் சூடான  தண்ணீரை பயன்படுத்தி தினமும் குளித்தால் உடம்பில் உள்ள நல்ல பாக்ட்ரியாக்களும் இறக்க நேரிடும். மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படும்.

தூங்கி எழுந்ததும் போன் பார்ப்பது:

தவறுகள் செய்வது மனித இயல்பு

பெரும்பாலானவர்களுக்கு தூங்கி எழுந்ததும் மொபைல் பார்ப்பது பழக்கமாக இருக்கும். ஆனால் இந்த மாதிரி தூங்கி எழுந்ததும் மொபைலில் வந்திருக்கும் Notification மற்றும் Message பார்ப்பதால்  உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அதனால் காலையில் எழுந்ததும் மொபைல் பார்க்காமல் சிறிது நேரம் கழித்து பார்க்க வேண்டும்.

முட்டை வைக்கும் முறை:

முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தினமும் சாப்பிடுவீர்கள். ஆனால் அந்த முட்டையை தினமும் கடையில் இருந்து தான் வாங்கி வருகிறீர்களா..! இல்லையே ஒரு வாரத்திற்கு தேவையான முட்டைகளை வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்து விடுகிறீர்கள். முட்டையை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது. அது போல பிரிட்ஜிலுருந்து எடுத்த உடனே சமைக்க கூடாது. குறைந்தது 1/2 மணி நேரம் கழித்து தான் சமைக்க வேண்டும்.

தூங்கும் முறை:

தூங்கும் முறை

பெரும்பாலானவர்கள் தூங்கி எழுந்ததும்  முதுகு மற்றும் கழுத்தை வலிக்கிறது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் தெரியுமா.? இரவு தூங்கும் போது குப்பறக்க படுக்காமல், ஒரு பக்கமாக படுக்காமலும் சாய்ந்த நிலையில் உறங்குவார்கள். இப்படி தூங்கும் போது ஒரு பக்கமாக உறங்குவது நல்லது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com