ஆத்திச்சூடி விளக்கம்
Aathichudi in Tamil With Meaning: அனைவருக்கும் வணக்கம்..! ஆத்திச்சூடி என்பது 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் எழுதிய நூலாகும். சிறுவர்களுக்கு இளம் பருவத்திலேயே மனதில் பதியும் வண்ணம் எளிமையான முறையில் அமைந்துள்ளது தான் இந்த ஆத்திச்சூடி. தமிழ் உயிர் எழுத்துகளை அடிப்படையாக கொண்டே இந்த ஆத்திச்சூடி பாடலானது அமைந்துள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது ஆத்திச்சூடியின் விளக்கத்தினை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் |
ஆத்திச்சூடி பொருள் விளக்கம்:
- அறம் செய்ய விரும்பு
விளக்கம்: இல்லாதவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்
விளக்கம்: கோபம் தணிய வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்
விளக்கம்: உன்னால் கொடுக்க முடிந்த பொருட்களை ஒழித்து வைக்காமல் கேட்பவர்களுக்கு கொடுத்து உதவி செய்.
4. ஈவது விலக்கேல்
விளக்கம்: தருமத்தின் பொருட்டு ஒருவர் பிறருக்கு உதவி செய்யும்போது தடுக்கக்கூடாது.
5. உடையது விளம்பேல்
விளக்கம்: உன்னுடையப்பொருளையோ அல்லது இரகசியங்களையோ மற்றவர்களுக்கு தெரியும் வகையில் சொல்லக்கூடாது.
6. ஊக்கமது கைவிடேல்
விளக்கம்: முயற்சியினை எப்போதும் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்
விளக்கம்: கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
திருக்குறள் விளக்கம்..! |
8. ஏற்பது இகழ்ச்சி
விளக்கம்: யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.
9. ஐயம் இட்டு உண்
விளக்கம்: ஊனமுற்றோருக்கு கொடுத்த பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு
விளக்கம்: உலக நடைமுறையை தெரிந்துக் கொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
11. ஓதுவது ஒழியேல்
விளக்கம்: நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
விளக்கம்: ஒருவரிடமும் பொறாமை குணத்துடன் பேசாதீர்கள்.
13. அஃகம் சுருக்கேல்
விளக்கம்: அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை குறைத்து விற்காதே.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |