Antenatal Scan Meaning
தினமும் இந்த பதிவின் வாயிலாக ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் உடலின் உள் பகுதியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே ஸ்கேன் எடுத்து பார்க்க சொல்வார்கள். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிப்பதற்காக பல ஸ்கேன்கள் எடுப்பார்கள். அந்த வகையில் அன்டெனட்டல் ஸ்கேன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் என்றால் என்ன? |
அன்டெனட்டல் ஸ்கேன் என்றால் என்ன..?
Antenatal Scan என்பது தமிழில் பிறப்புக்கு முந்தைய ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் அசைவுகளை தெரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் ஸ்கேன்களை Antenatal Scan என்று சொல்வார்கள்.
பொதுவாகம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தையை காண வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் மருத்துவர்கள் கர்ப்பத்தின் காலத்தை பொறுத்து ஸ்கேன் எடுப்பார்கள். அதற்கு பல ஸ்கேன்கள் இருக்கிறது. அதை தான் Antenatal Scan ஸ்கேன் என்று சொல்கிறார்கள்.
இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் குழந்தையைப் படம் பிடிப்பதற்காக ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஸ்கேன்கள் முற்றிலும் வலியற்றவை என்றும் மற்றும் அறியப்பட்ட பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது முதலில் எடுக்கப்படும் ஸ்கேன் Dating Scan அல்லது Viability Scan என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை சரிபார்க்கவும், கருப்பையின் உள்ளே அல்லது வெளியே கரு எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவதற்காகவும் இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?
இரண்டாவதாக எடுக்கப்படும் ஸ்கேன் பொதுவாக கர்ப்பத்தின் போது 11 வாரங்கள் முதல் 13 வாரங்கள் வரை ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் பொதுவாக NT ( Nuchal Translucency) ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் உங்கள் குழந்தையின் Downs Syndrome அபாயத்தை மதிப்பிடுவதற்காக செய்யப்படுகிறது.
மூன்றாவதாக எடுக்கப்படும் ஸ்கேன் அனோமாலி ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக கர்ப்பத்தின் 18 முதல் 22 வாரங்களுக்கு இடையில் எடுக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் குழந்தையின் கட்டமைப்பு குறைபாடுகளை சரிபார்க்கவும், அனைத்து உறுப்புகளும் சாதாரணமாக இருக்கிறதா என்று குழந்தையை பரிசோதிக்கவும் மற்றும் அம்னோடிக் திரவத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
சிலருக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் கர்ப்பத்தைப் பொறுத்து அதிக எண்ணிக்கையிலான ஸ்கேன்கள் வழங்கப்படுகின்றன.
செபாலிக் நிலையில் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் தெரியுமா? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |