வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாரதியார் பாடல் வரிகள் | Bharathiyar Songs in Tamil

Updated On: October 25, 2023 6:09 AM
Follow Us:
bharathiyar songs in tamil
---Advertisement---
Advertisement

Bharathiyar Songs in Tamil

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தலைவர்களுடைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் போன்றவற்றிற்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, பாடல்கள் பாடுவது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர போராட்ட களத்தில் தன்னுடைய கருத்துக்கள் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் பாரதியார். உயிருள்ள வரை மறக்க முடியாத கவிஞர். நாட்டில் உள்ள மக்களின் மீது அதிகம் ஈடுபாடும், தமிழ்மொழி மீது பற்றும் கொண்டவர் பாரதியார். தேசிய கவி என போற்றப்படும் மாபெரும் புரட்சி வீரர் மகாகவி பாரதியார் பற்றிய பாடல் வரிகளை அறிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாரதியார் பாடல் வரிகள்:

  1. ஓடி விளையாடு பாப்பா! – நீ
    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
    கூடிவிளையாடு பாப்பா! – ஒரு
    குழைந்தையை வையாதே பாப்பா!.

2. சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

3. கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

4. பாலைப் பொழிந்து தரும், பாப்பா! – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4

5. வண்டி இழுக்கும் நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

6. காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6

7. பொய்சொல்லக் கூடாது பாப்பா! – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!

8. பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

9. துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

10. சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

11. தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

12. சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

13. வடக்கில் இமயமலை பாப்பா! – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!

14. வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

15. சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

16. உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now