உங்கள் Blood Group-ஐ வைத்து உங்கள் குணத்தை அறியலாம்..!

Blood Group Personality in Tamil

இரத்த வகையின் குணங்கள்..! Blood Group Personality in Tamil..!

பொதுவாக புது வருடம் பிறக்கிறது என்றால் பேப்பர், டிவி என்று அனைத்திலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அந்த வரும் எப்படி இருக்கும் என்று ராசி பலனை கூறுவார்கள். ஆனால்நமது ஆளுமையை தெரிந்துகொள்ள நிறைய வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் Blood Group Personality நமது Blood Group-ஐ வைத்து நமது குணம் எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். சரி வாங்க இப்பொழுது உங்கள் Blood Group-ஐ வைத்து ஆளுமை எப்படி இருக்கும் என்பதை பற்றி நாம் அறிவோம்.

A இரத்த வகை:

A இரத்த வகையை கொண்டவர்களிடம் தலைமைத்துவம் அதிகமாக இருக்கும். மற்றும் இவர்களிடம் பொறுமை குணம் நிறைந்து காணப்படும். மேலும் இவர்களிடம் மனிதநேயம் மற்றும் விடாமுயற்சி நிறைந்த நபராக விளங்கக்கூடியவர். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

இருப்பினும் இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தீர்கள் என்றால் அதனை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அதேபோல் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க மாட்டார்கள். ஒரு வேலையை முடித்துவிட்டு தான் அடுத்த வேலையை தொடங்க ஆரம்பிப்பார்கள்.

A+ இரத்த வகை:

A இரத்த வகையில் உள்ள அனைத்து குணங்களும் A+ இரத்த வகைக்கு உண்டு என்றாலும். A இரத்த வகையை விட A+ இரத்த வகையின் ஆற்றலானது இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். அனைத்து விஷயங்களை மிக எளிதாக செய்து முடிப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

A- இரத்த வகை:

A- இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உள்ள நம்பிக்கையே அவர்களுக்கு குறைவாக இருக்கும். இவர்களிடம் கூச்சசுபாவம் அதிகமாகவே நிறைந்து காணப்படும்.

இருப்பினும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிக சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவர்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டார்கள்.

B இரத்த வகை:

B இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக முடிவு எடுக்கக்கூடியவர்கள். குறிப்பிக்க அனைத்து விஷயங்களிலும் சமுதாயத்தில் இவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது மனம் மிகவும் இளகிய மனமாக இருக்கும். இவர்கள் குறிப்பக யாரிடமும் சுயநலகமாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருப்பார்கள்.

B+ இரத்த வகை:

B+ இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது மன உணர்ச்சிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் செயல்படுத்தும் எந்த வேலையாக இருந்தாலும் சரி அவற்றை நேர்மையாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காதல், தொழில், கற்பனை, செயல்கள் இவை அனைத்துமே மிக பெரிதாகவே இருக்கும்.

B- இரத்த வகை:

B- இரத்த வகையை சேர்ந்தவர்கள் மிகவும் சுயநலவாதியாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள், இவர்களுக்கு என்ன தொனிக்கிறது அவற்றை தான் செய்வார்கள். இருப்பினும் இவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இருப்பினும் உறவு முறை என்று வரும்பொழுது இவர்களிடம் கோவம் அதிகமாக இருக்கும். பொறுமையை இழந்துவிடுவார்கள்.

AB இரத்த வகை:

AB Blood Group பிரிவை சேர்ந்தவர்கள் குணம் எப்படி இருக்குன்னா.. A இரத்த வகை, B இரத்த வகை ஆகிய இரண்டின் கலவையாக தான் இருக்கும். தனித்துவமாக யோசிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்களை புரிந்துகொள்வது என்பது மிகவும் கஷ்டம் அப்படினும் சொல்லலாம். இருப்பினும் இவர்கள் ஒரு விஷயத்திற்கு முடிவு எடுப்பதில் மிகவும் குழப்பம் அடைவார்கள். அனைவரிடமும் எளிதாக பழகிவிடுவார்கள் என்றாலும் நெருங்கிய நண்பர்கள் என்று இவர்களுக்கு அதிகம் இருக்க மாட்டார்கள். இவர்களும் எளிதாக கோவம் கொள்வார்கள், உணர்ச்சிவசப்படுவார்கள்.

இவற்றையும் கிளிக் செய்து படிக்கவும் 👉 மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

AB+ இரத்த வகை:

இந்த பிரிவினை சேர்ந்தவர்கள் எப்பொழுதுமே ஜாலி டைப் என்று சொல்லலாம். இவர்களிடம் ஜாகைச்சுவை திறன் அதிகமாகவே காணப்படும். அனைவரையும் மகிழ்ச்சியக வைத்திருப்பார்கள். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோயம்படமாட்டார்கள். இவர்கள் புதிய புதிய விஷயங்களை செய்ய விரும்புவார்கள். மார்டனாக இருக்க விரும்புவார்கள். உடல் நலத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் நபராக இருப்பார்கள். அனைவரிடமும் நண்பர்களை போல் பழகுவார்கள்.

AB- இரத்த வகை:

இந்த பிரிவை சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்துவிட்டார்கள் என்றால் அந்த தவறை எளிதில் மன்னிக்கவே மாட்டார்கள். இவர்களுக்கு லாபம் தரும் செயல்களை மட்டுமே செய்வார்கள். குற்ப்பிக்க இவர்கள் நண்பர்களிடம் மட்டும் தான் நெருங்கி பழகுவார்கள். இவர்களது உறவுகளை எப்பொழுது மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வார்கள்.

O+ இரத்த வகை:

இந்த O+ இரத்த வகையை சேர்ந்தவர்களிடம் நேர்மை கோணம் அதிகம் நிறைந்து காணப்படும். இவர்கள் குறிப்பாக பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். அதேபோல் பொய் சொல்றவங்களையும் சுத்தமாக பிடிக்காது. உதவி என்று கேட்பவர்களுக்குமு உடனே உதவி செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும்.

O- இரத்த வகை:

இவர்கள் மிகவும் ஸ்மார்டாக இருப்பார்கள், அதிக உறுதியக இருப்பார்கள். குறிப்பாக யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழகிடமாட்டார்கள். இவர்கள் புதிது புதிதாக எதாவது வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காலத்தால் வாழ்க்கையில் அன்பை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.

இவற்றையும் கிளிக் செய்து படிக்கவும் 👉 உங்களுக்கு பிடித்த நிறம் உங்கள் குணத்தை சொல்லும்!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்