மனித மூளை பற்றிய தகவல்கள் | Brain Information in Tamil

Advertisement

மூளை பற்றிய சில தகவல்கள்

Brain Information in Tamil: உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளை பகுதி. மூளையின் அமைப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. உடலில் அதிகமாக ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மூளை பகுதி தான். மூளையின் அளவானது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவில் மாறுபட்டு இருக்கும். சிலருக்கு மூளையானது பெரிதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அதிக திறன் இருப்பதாக ஆய்வாளர்கள் அவர்கள் கருத்தில் கூறுகிறார்கள். சரி இதனை தொடர்ந்து மூளை பற்றி நீங்கள் அறிந்திடாத பல ரகசிய தகவலை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம். 

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!

மூளை பற்றிய அரிய தகவல்:

  • Brain Information in Tamilவயது வந்தவர்களின் மூளையானது சுமார் 1.4 கிலோ கிராம் எடை அளவிற்கு இருக்கும்.
  • மனிதரின் உடல் எடையில் மூளையானது 2% சதவிகிதத்தினை கொண்டுள்ளது.

பெண்களை விட ஆண்களின் மூளை பெரியதா?

Brain Information in Tamil

  • பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியது.
  • ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ  அளவு இருக்கும்.

பெருமூளை எடை அளவு:

மூளை பற்றிய சில தகவல்கள்

  • மூளையின் முக்கியப் பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின்  எடை 85% இருக்கும். 
  • மூளையானது 75% நீரினால் கொண்டது. அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும்போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
உங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டுமா..?

மூளை வளர்ச்சி:

  • மனித மூளையானது சுமார் 18 வயதிலிருந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் முழு முதிர்ச்சியை மூளை அடைகிறது.
  • முதல் வருடத்தில் இதனுடைய வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

மூளையில் இருக்கக்கூடிய நியூரான்ஸ்கள் (Neurons) அளவு எத்தனை:

 Brain Information in Tamil

  • கழுத்து பகுதி, தலையின் தசைகள் மற்றும் நரம்புகளுடன் சேர்ந்து மூளையில் ஏற்படக்கூடிய இரசாயன எதிர்வினை காரணமாக தலைவலி பிரச்சனை உண்டாகிறது.
  • மனித மூளையில் சுமார் 10,000 கோடி நியூரான்கள் உள்ளது.
  • மனிதர்கள் தங்களுடைய மூளையில் 10% மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது தவறான விஷயம். உண்மையில் நாம் மொத்த மூளையையும் பயன்படுத்துகிறோம். இரவில் தூங்கும் பொழுது 10 சதவீதத்திற்கும் மேலாக மூளையை பயன்படுத்துகிறோம்.
  • நீங்கள் கண்களால் பார்க்கக் கூடிய, மனதால் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய எல்லா தகவல்களும் உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் நடைபெறுகிறது. நியூரான்கள் தகவல்களை வேறுபட்ட வேகத்தில் நகர்த்துகிறது. நியூரான்களுக்கு இடையில் தகவல்கள் அதிகபட்சமாக 402 கிலோமீட்டர்கள் வேகத்தில் அனுப்பப்படுகிறது.

மூளை தனது செயல்திறனை எப்போது இழக்க தொடங்குகிறது?

 Brain Information in Tamil

  • மனித மூளையனாது 20 வயதிற்கு பிறகு சில நினைவு திறன மற்றும் அறிவாற்றல் திறனை இழக்க தொடங்குகிறது. நமக்கு வயது அதிகரிக்கும் போது மூளை பகுதியானது சிறியதாக தொடங்கும். மனித மூளையில் 160000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளது.
  • மூளையானது நமது உடலில் 20% ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும் போது தமனிகள் உங்கள் ரத்தத்தில் 20 முதல் 25% அளவிற்கு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 750 லிருந்து 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.

மேலும் இதனுடைய தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கிறோம்..நன்றி வணக்கம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement