மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள் | Brain Questions in Tamil

Brain Questions in Tamil

மூளைக்கு வேலை தரும் புதிர்கள் | Brain Questions in Tamil

மூளையின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மூளைக்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம்முடைய அறிவு திறன் மேம்படும். நம் மூளைக்கு வேலை கொடுக்கும் அற்புதமான புதிர்களை இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த பதிவு நுழைவு தேர்வு, நேர்காணல் தேர்வு போன்றவற்றிற்கு செல்லும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க மூளைக்கு வேலை கொடுக்கும் சில வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ளலாம்.

Brain Test Questions in Tamil With Answer:

  1. வாங்கும் போது கருப்பாக இருக்கும், பயன்படுத்தும் போது சிவப்பாக இருக்கும், பயன்படுத்திய பின் வெள்ளையாக இருக்கும் அது என்ன?

விடை: கரி

2. 28 நாட்கள் கொண்ட மாதங்கள் ஒரு வருடத்தில் எத்தனை வரும்?

விடை: 12 அனைத்து மாதங்களும்

3. சிவப்பு மாளிகை இடது பக்கத்திலும், நீல மாளிகை வலது பக்கத்திலும், கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருந்தால் வெள்ளை மாளிகை எங்கு இருக்கும்?

விடை: வெள்ளை மாளிகை அமெரிக்காவில் வாஷிங்டனில் இருக்கும்.

மூளைக்கு வேலை தரும் புதிர் கணக்குகள்:

4. நீங்கள் சிறையிலிருந்து தப்பிக்கிறீர்கள், உங்களுக்கு முன்னால் மூன்று கதவுகள் உள்ளன. இடது புறத்தில் உள்ள கதவு எரிமலை குழிக்கு வழிவகுக்கிறது. மையத்தில் உள்ள கதவு கொடிய வாயு நிரப்பப்பட்ட அறைக்கு வழிவகுக்கிறது. வலது புறம் உள்ள கதவு மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கத்திற்கு வழிவகுக்கிறது நீங்கள் எந்த கதவை தேர்வு செய்விர்கள்?

விடை: வலது புறம் உள்ள கதவு. மூன்று மாதங்களாக சிங்கம் சாப்பிடாததால் அது இறந்திருக்கும்.

5. 2+10=24, 3+6=27, 7+2=63 எனில் 5+3=? விடை என்னவாக இருக்கும்?

விடை: 5+3=40

விளக்கம்: 2+10 கூட்டிக் கொள்ள வேண்டும் அதில் வரும் விடையுடன் 2 ஆல் பெருக்கிக்கொள்ளவும்.

2+10=12 >> 12*2=24

3+6=9 >> 9*3=27

7+2=9 >> 9*7=63

5+3=8 >> 8*5=40

Brain Questions in Tamil:

6. நான் உலகம் முழுவதும் பயணம் செய்கிறேன், ஆனால் ஒரு போதும் என் இடத்தில் இருந்து நகரமாட்டேன் நான் யார்?

விடை: அஞ்சல் முத்திரை

7. ஒரு பண்ணையில் ஆடுகளும், கோழிகளும் திருடு போய்விட்டன. காவல்காரனிடம் போலீஸ் விசாரிக்கும்பொழுது பின்வருமாறு கூறுகிறான். திருடு போன்றவற்றின் கால்களை எண்ணினால் 330, தலைகளை எண்ணினால் 92 என்று காவல்காரன் கூறுகிறான். அப்பொழுது திருடு போன ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?

விடை: ஆடுகள் 73, கோழிகள் 19

8. இரு ஆசிரியர்கள் ஒரே கல்லூரியில் பணிபுரிகின்றனர். அதில் ஒருவர் மற்றவரின் தந்தை ஆவார், அப்படியெனில் இருவருக்குமான உறவு என்ன?

விடை: கணவன், மனைவி

9. டேவிட்டுக்கு அறிவியல், கணிதம், ஆங்கிலம், வரலாறு என நான்கு தேர்வுகள் இருந்தன. அவன் அனைத்து தேர்வுகளையும் இந்தியில் எழுதினான், ஆனால் அவனுடைய ஆசிரியருக்கு இந்தி தெரியாது. ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் அவன் எழுதிய தேர்வு தாளை புரிந்து திருத்தினார், அவருக்கும் இந்தி தெரியாது. அவர் மட்டும் எப்படி தேர்வுத்தாளை புரிந்து கொண்டு திருத்தினார்

விடை: கணித விடைத்தாள்

Brain Questions in Tamil:

10. ஒரு நிகழ்ச்சியில் 600 பெண்கள் கலந்து கொள்கின்றனர். அதில் 5% பேர் ஒரு கையில் மட்டும் வளையல் அணிந்துள்ளனர், மற்ற 95% பேரில் பாதி பேர் மட்டுமே இரண்டு கையிலும் வளையல் அணிந்துள்ளனர், மீதி பேர் வளையலே அணியவில்லை, அவ்வாறெனில் மொத்தம் எத்தனை பேர் வளையல் அணிந்துள்ளனர்.

விடை: மொத்தம் 600 பேர். அதில் 5% அதாவது 30 பேர் ஒரு கையில் மட்டும் வளையல் அணிந்துள்ளனர். மீதம் 95% அதாவது 570 பேரில் பாதி 285 பேர் இரண்டு கையிலும்  வளையல் அணிந்துள்ளனர்.

285*2+30=600

11. இரண்டு நபர்கள் ஆற்றின் மறுபுறம் செல்ல வேண்டும். அங்கு ஒரு படகு மட்டுமே உள்ளது. ஒரே சமயத்தில் ஒரு நபர் ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஒரு முறை சென்று பின் திரும்புவதற்கு மட்டுமே அதில் எரிபொருள் உள்ளது. ஆனால் இருவரும் படகில் சென்று ஆற்றின் கரையை அடைந்தார்கள் அது எப்படி?

விடை: அவர்கள் ஆற்றின் எதிர் எதிர் பக்கங்களில் இருந்தனர். ஒருவர் ஆற்றின் கரையை அடைந்ததும், மற்றொருவர் படகை எடுத்து கொண்டு ஆற்றின் இன்னொரு கரையை அடைந்தார்.

12. ஒரு பெரிய கனரக வாகனம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. எவ்வளவு முயன்றும் வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு வயதான முதியவர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் சொன்ன யோசனைப்படி செய்தவுடன் வண்டி பாலத்தின் அடியில் இருந்து வெளியே வந்துவிட்டது, அப்படி அவர் என்ன யோசனை சொல்லிருப்பார்?

விடை: அவர் வாகனத்தின் டயர்களில் இருக்கும் காற்றை பிடுங்க சொன்னார். காற்றை பிடிங்கியவுடன் வண்டியின் உயரம் குறைந்தது. வாகனமும் எளிதாக வெளியே வந்தது.

தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
கணக்கு புதிர் கேள்வி பதில்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil