2021-யில் சந்திர கிரகணம் எப்போது? | Chandra Kiraganam 2021

Advertisement

சந்திர கிரகணம் 2021 | Santhira Kiraganam 2021

Chandra Kiraganam 2021:- சந்திரன் அல்லது சூரியன் போன்ற கிரகங்கள் மற்றொரு கிரகத்தின் நிழலுக்கு நகரும் போது ஒரு கிரகணம் நிகழ்கிறது. பூமியில் மட்டும் இரண்டு வகையான கிரகங்கள் சந்திக்க முடியும். அவை சூரிய கிரகணங்கள் மற்றொன்று சந்திர கிரகணங்கள்.

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவை சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் சீரமைக்கப்படும் போது ஏற்படும் நிகழ்வாகும். சூரிய கிரகணமானது சந்திரன் சூரிய ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை பூமியில் செலுத்தும் போது நிகழ்கிறது. சந்திர கிரகணமானது சூரியனின் ஒளி சந்திரனைத் தாக்கும் வழியில் பூமி வரும் போது நிகழ்கிறது.

சரி இந்த பதிவில் இந்த 2021-ம் ஆண்டு நிகழ இருக்கும் 2 சந்திர கிரகணம் எப்போது என்று படித்தறியலாம் வாங்க.

சந்திர கிரகணம் 2021 எப்போது? | Chandra Kiraganam 2021

2021-ம் ஆண்டு சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த சந்திர கிரகணமானது இந்தியாவில் மே மாதம் 26.05.2021 அன்று பிற்பகல் 02:17 மணிக்கு தொடங்கி இரவு 07:19 மணிக்கு முடிவடையும். மேலும் இந்த சந்திர கிரகணம் தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும்.

அடுத்ததாக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 தேதி அன்று நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணமாக இருக்கும். இது காலை 11:32 மணிக்கு தொடங்கி மாலை 06:33 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணம் ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, ஆஸ்திரேலியா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதிகளில் தெரியும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement