கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு..! Christmas History in Tamil..!

Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு..! Christmas History in Tamil..!

Christmas History in Tamil:- கிறிஸ்துமஸ் என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, கிருஸ்துவ நண்பர்கள் வீட்டில் கேக் வெட்டுவது மற்றும் தடபுடலாக விருந்து. இவை தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும்.

ஆனால் பலருக்கு கிறிஸ்துமஸ் என்றால் என்ன? கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு (Christmas History Tamil), கிறிஸ்துமஸ் மரம் உருவாகிய கதை போன்றவற்றை இங்கு நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Christmas decorations ..! கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் செய்வது எப்படி?

கிறிஸ்துமஸ் என்றால் என்ன? christmas story tamil:

christmas history in tamil

Christmas History in Tamil:- நத்தார் கிறிஸ்து பிறப்பு பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.

கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறித்து பிறப்பு விழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா? அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..!

கிறிஸ்துமஸ் உருவான கதை (Christmas History in Tamil):-

christmas history in tamil

Christmas History in Tamil:- இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25-ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர்.

ஆனால் டிசம்பர் 25-ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடைகாண முற்பட்டுள்ளனர்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில் தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகளும், கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள்.

குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்.

இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும்! குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால் இது மிகையல்ல! இந்த நாட்கள்தான் கிறிஸ்துமஸ் தோன்ற காரணமானது.

christmas history in tamil

12 நாட்கள் கிறிஸ்துமஸ்:-

Christmas History in Tamil:- இந்த கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 6-ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நட்களும் ஆடலும், பாடலுடன் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக உலகமெங்கும், இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் கடைப்பிடித்திருக்கின்றனர்.

இருந்தாலும் 1800கள் வரையில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கொண்டதாக பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

பின்னாளில் “சாண்ட்ட கிளாஸ்” என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு:

Christmas History in Tamil:– கிறிஸ்துமஸ் மரம் வரலாறு:- அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார்.

அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement