தமிழ் நகைச்சுவை விடுகதைகள் | Comedy Vidukathai in Tamil With Answer

Advertisement

Comedy Vidukathai in Tamil With Answer

நகைச்சுவை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பார்த்தும், கேட்டும் மகிழ்வோம். இத்தகைய நகைச்சுவையில் விடுக்கைதிகள் இருக்கின்றன. அவை படிக்கும் பொழுது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். நீங்கள் நகைச்சுவை விடுகதைகளை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த பதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இங்கு சில நகைச்சுவை விடுகதைகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க.

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்:

1. உண்ண முடியாத பன் எது?

விடை: ரிப்பன்

2. உட்கார முடியாத தரை எது?

விடை: புளியோதரை

3. நகைக் கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது?

விடை:பொன்வண்டு

4. உடுத்திக்கொள்ள முடியாத ட்ரஸ் எது?

விடை: அட்ரஸ்

5. சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது?

விடை: கத்திரிக்காயை

6. பேச முடியாத வாய் எது?

விடை: செவ்வாய்

7. சாப்பிடக்கூடிய ஆணி எது?

விடை: பிரியாணி

8. காய்க்கவே செய்யாத மா எது?

விடை: ஆத்மா

9. மரியாதை தெரியாத மலர் எது?

விடை: வாடா மல்லி

10. மிகவும் மக்கான ஊர் எது?

விடை: மாமண்டூர்

11. சாப்பிட முடியாத மீன் எது?

விடை: விண்மீன்

12. கையுள்ள மரம் எது?

விடை: முருங்கை மரம்

13. பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது?

விடை: சண்டிகர்

14. ரொம்பவும் வெயிட்டான பறவை எது?

விடை: கருடன்

மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்
தமிழ் விடுகதைகள் 400 With Answer
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
அறிவியல் விடுகதைகள்
பாட்டி விடுகதைகள்
புதிர் வினா விடைகள்
கடினமான விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement