Countries Sell Petrol 1 Rupee and 2 Rupees in Tamil
நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவது போல். பெட்ரோல் டீசலின் விளையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் பெட்ரோலை 1 ரூபாய், 2 ரூபாய்க்கு விற்பனை செய்கிறதாம் அந்த நாடுகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். சரி வாங்க பெட்ரோலை 1 ரூபாய், 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நாடு எது என்பதை பற்றி படித்தறியலாம்.
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு இடையான பெட்ரோல் விலை நிலவரம்:
இந்தியாவில் பெட்ரோல் விலை, ஹாங்காங், ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவும், சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகவும் உள்ளது.
ஆஸ்திரேலியா, துருக்கி, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உள்ளது. உலகிலேயே அதிகமான விலைக்கு பெட்ரோலை விற்கும் நாடு ஹாங்காங்.
அடுத்ததாக நார்வேயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் முறையே ஒரு லிட்டர் பெட்ரோல் 168.25, 163.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறதாம்.
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் 96.72 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 64 ரூபாயாக உள்ளது. நேபாளத்தில் 94.13 ரூபாய்க்கும், வங்கதேசத்தில் 79.94 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது.
பெட்ரோலை 1 ரூபாய், 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நாடு எது தெரியுமா?
சரி இப்போ நாம் நம்ம விஷயத்திற்கு வருவோம் உலகிலேயே வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.93 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. லிபியாவில் 2.48 விற்பனை செய்கிறது, ஈரானில் 3.95 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |