கனவில் காகம் வந்தால் என்ன பலன்
Pothunalam.com-யிற்கு வருகைதரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது அன்பான வணக்கம். இன்று நாம் காகம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம். காகத்தை கனவில் கண்டால் நமது பயம், எண்ணங்கள், பிறருக்கு உடல்நல குறைவு ஏற்படுவது அல்லது நமது உடல்நலம் குறித்த பிரச்சனைகள் ஏற்படுவது, நமது மரணத்தை தடுத்தல் அல்லது பிறருக்கு மரணம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை நமக்கு முன்கூட்டியே உணர்த்துகிறது என்று அர்த்தமாகும்.
இதன் காரணமாகவே அனைவருக்கும் கனவில் காகம் வந்தால் மிகவும் பயமும், மனதில் பலவகையான குழப்பங்களும் ஏற்படும். ஆகவே அந்த கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். சரி இப்பொழுது நாம் காகம் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா?? கனவில் காகம் வந்தால் அதற்கு என்ன பலன்.. என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..
kakam kanavil vanthal:
கனவில் காகம் நமது தலைக்கு மேலே கூட்டம் கூட்டமாக பறப்பது போன்றோ அல்லது கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பது போன்றோ கனவு வந்தால் கனவு காண்பவரின் அறிவே வியங்கும் அளவிற்கு முடிவுகளை எடுப்பார்கள்.
அல்லது இக்கனவு தங்களது அதிர்ஷ்டம் மற்றும் தங்களது யோகம் சில காலங்களில் குறையப் போகின்றது என்பதை உணர்த்தும் கனவு பலனாகும்.
Kagam Kanavil Vanthal Enna Palan:
கனவில் காகத்தை சாதாரணமாக பார்த்தால் கனவு காண்பவர் அவரின் உறவு நிலையில் உள்ளவரை உடல் ரீதியான கவர்ச்சியில் மட்டும் மனம் இருக்கும். மனதில் உள்ள அன்பை ஒருவர் மற்றவருக்கு தெரியப்படுத்தமாட்டார்கள் என்பதை இக்கனவு உணர்த்துகிறது.
கனவில் காகம் வந்தால் என்ன பலன்:
உங்கள் கனவில் ஒற்றை காகம் அல்லது ஒற்றை காகம் தங்களை நோக்கி பார்த்து வருவது போல் கனவு வந்தால் அல்லது ஒற்றை காகம் நம்மை கொத்துவது போன்று கனவு கண்டால் கனவு கண்டவர் நீதியரசர் சனீஸ்வரரின் சனிகிரக பாதிப்புகள் முழுமையாக இன்னும் முடிவடையவில்லை என்பதை இக்கனவு கூறுகின்றது. அதேபோல் இக்கனவு தங்களுக்கு கண் திருஷ்ட்டி அதிகமுள்ளதையும், எதிரிகள் தங்களுக்கு செய்திருக்கும் செய்வினை மற்றும் குடும்பத்தில் ஏற்படவிருக்கும் பிரச்சனைகளுக்கு எச்சரிக்கையை கூறுகின்றது இக்கனவு பலன்.
Kagam Kanavu Palangal in Tamil:
நிறைய காகம் வானில் பறந்துகொண்டிருப்பது போல் கனவு கண்டால் அது ஒரு கெட்ட செய்தியை குறிக்கின்ற ஒரு கனவாகும். அதாவது தங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து இரங்கல் செய்தி வரப்போவதையோ அல்லது தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறக்க போவதையோ இந்த கனவு உணர்த்துகிறது.
Kagam Kanavil Vanthal Palan:
காகம் மரத்தில் அமர்ந்திருப்பது போல் கனவு வந்தால், கனவு கண்டவருக்கு வரவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும்.
Crow Dream Meaning in Tamil | கனவில் காகம் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
காகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இக்கனவு எச்சரிக்கைப்படுத்தும் கனவாகும். அதாவது கனவு கண்டவரின் குற்றத்தை உணர்த்தும் கனவாகும். ஆகவே தாங்கள் செய்த குற்றத்திற்கு சட்டத்தால் தீர்ப்பு கிடைத்து தண்டனை வழங்கப்படுமோ என்ற பயத்தை குறிக்கும் கனவாகும்.
Crow Dream Meaning in Tamil:
காகம் தங்கள் கனவில் அருகில் அமர்ந்திருப்பது போன்று கனவு கண்டால் அதற்கு என்ன பலன் என்றால் கனவு கண்ட நபர் தான் விருப்பம்போல் முடிவுகளை எடுக்கவிடாமல் யாரோ ஒருவர் தங்களது விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதை உணர்த்தும் கனவாகும்.
இக்கனவுகளுக்கான பரிகாரம் என்ன:
தங்கள் கனவில் காகத்தை கண்டால் அதற்கு மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் காகங்களுக்கு உணவிடுவது ஒரு சிறந்த பரிகாரமாகும். மேலும் காகங்களுக்கு தினமும் உணவு வைத்து வருபவர்களுக்கு செய்வினை கண்திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளிடமிருந்து எந்த பாதிப்புகளும் வராது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |