கனவு பலன் துணி | Dress Kanavu Palangal in Tamil
Dress Kanavu Palangal in Tamil:- நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் இருக்கின்றது. அந்த வகையில் துணி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம். துணி பற்றிய கனவுகள் பெரும்பாலும் நமது வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள், நிதி நிலை மற்றும் நமது ஆளுமையை பற்றிய பொதுவான கனவு பலன்களாக தான் இருக்கும். சரி வாங்க துணி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
துணி வாங்குவது போல் கனவு வந்தால்?
பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல். துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும்.
புது துணி கனவில் வந்தால் என்ன பலன்?
உங்களுடைய கனவில் புதிய ஆடைகளை வாங்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் அந்த கனவு பெரும்பாலும் சில உள் மனதின் எண்ணங்கள் சிறந்த விஷயங்களை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.
திருமண கனவு | Marriage Kanavu Palangal in Tamil |
புதிய ஆடை கனவில் வந்தால்?
தங்களுடைய கனவில் நீங்கள் புதிய ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், அந்த கனவு பொதுவாக உங்களுடைய மாறுபட்ட ஆளுமையை குறிக்கிறது. ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.
துணி கனவு பலன்கள்:-
துணி மாற்றுவது போல் கனவு வந்தால் அத்தகைய கனவு உங்களுடைய ஆளுமையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை குறிக்கும் கனவாகும். இந்த கனவு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் அல்லது உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
உங்களுடைய கனவில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடைகளை மாற்றி கொண்டே இருப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் உங்களை மாற்றி கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது. அல்லது உங்கள் வாழ்க்கையில் சில புதுமையான விஷயங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள எச்சரிக்கின்றது என்பதை குறிக்கும்.
கிழிந்த துணி கனவில் வந்தால் அல்லது அழுக்கு துணியை கனவில் கண்டால் என்ன பலன்?
கிழிந்த அல்லது அழுக்கு துணியை நீங்கள் ஆடையாக அணிந்திருப்பது போல் கனவு வந்தால், அந்த கனவு பெரும்பாலும் கெட்ட சகுனமாகும் அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையான கெட்டது நடக்க போவதற்கான அறிகுறியாகும். ஆகவே நீங்கள் எந்த ஒரு விஷயங்களை செய்வதாக இருந்தாலும் அவற்றில் அதிக கவனமாக இருக்கவும்.
கனவில் யானை வந்தால் என்ன பலன் |
Dress kanavu palangal in tamil:
சில சமயங்களில் பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு சில சூழ்நிலைகளில் நீங்கள் காண்பிக்கும் முறையற்ற நடத்தையை குறிக்கிறது. சில சூழ்நிலைகள் அல்லது நீங்கள் செய்ய வேண்டிய சில கடமைகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை குறிக்கும்.
புது துணி கனவில் வந்தால் என்ன பலன்:
உங்களுக்கு பிடிக்காத ஆடையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு நீங்கள் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதை குறிக்கும்.
Thuni Kanavu Palangal in Tamil:
கனவில் வித்தியாசமான ஆடை அணிந்து ஒரு குழுவினரால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் கண்டால், அந்த கனவு மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானது. அதாவது அந்த கனவு உங்கள் உணர்வை குறிக்கும். இந்த கனவு சில சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் அது பெரும்பான்மையினர் உங்கள் கருத்தை எதிர்ப்பதை குறிக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |