கழுகு கனவில் வந்தால் என்ன பலன் | Eagle in Dream Meaning in Tamil

Eagle in Dream Meaning in Tamil

கனவில் கழுகு வந்தால் என்ன பலன் | Kanavil Kalugu Vanthal Enna Palan 

Eagle in Dream Meaning in Tamil: கழுகு அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த இனமாகும். கழுகுகளில் 74 வகையான இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 வகையான கழுகு இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, பருந்து, பணவை, பாறு, வல்லூறு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும். அந்த வகையில் இந்த பதிவில் கனவில் கழுகுவினை (Kazhugu kanavil vanthal) கண்டால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்?

Kalugu Kanavu Palan in Tamil:

கனவில் கழுகு உங்களை தாக்குவது போல் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய ஆழ்ந்த கனவில் கழுகு உங்களை தாக்குவது போல் வந்தால் நீங்கள் செய்கின்ற தொழில் மற்றும் வேலைகளில் இலக்கை அடைவதற்கு நிறைய கஷ்டத்தினை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கழுகை பார்த்து அச்சம் கொள்வது போல் வந்தால்:

கனவில் கழுகினை பார்த்து பயப்படுவது போன்று வந்தால் வரும் காலங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

கழுகு மேலே பறப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகு மேல் நோக்கி பறப்பது போல் வந்தால் உங்களுடைய வாழ்க்கை பாதையில் உங்களுக்கென்ற லட்சியத்தினை அடைய முன்னேறி செல்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

கழுகு உங்கள் தலையில் இருப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகு உங்களுடைய தலையில் வந்து இருப்பது போல் கண்டால் உங்களுக்கு விரைவில் பதவியில் உயர்வு கிடைக்க போகிறது என்று இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது. 

கழுகு கூட்டில் இருப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்:

கனவில் கழுகு கூட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு நல்ல நட்பு கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

All Kanavu Palangal in Tamil

கழுகினை பிடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகை பிடிப்பது போல் வந்தால் உங்களுடைய தொழிலில் சில தோல்விகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

கழுகை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கழுகினை கொல்வது போல் கனவில் வந்தால் உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் இருக்கக்கூடிய இலக்குகளை அடைய யாராலும் உங்களை தடுக்க முடியாது என்பதை குறிக்கிறது. உங்களுடன் இருக்கும் அனைத்து பகைவர்களையும் தோற்கடித்து மிகப்பெரிய செல்வத்தை அடைவீர்கள்.

கனவில் கழுகை வேறொருவர் கொல்வது போல் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் கழுகை வேறொருவர் கொல்வது போல் வந்தால் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டங்கள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

கழுகு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகு சாப்பிடுவது போன்று வந்தால் உங்களுக்கு வரக்கூடிய சவாலான போராட்டங்களிலும் போராடி மிகப்பெரிய வெற்றியை நீங்கள் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் கழுகு வானத்தில் வட்டமிடுவது போன்று வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகு வானத்தில் வட்டமடிப்பது போல் வந்தால் கூடிய விரைவில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்கக் கூடிய புதிய வழிகள் கிடைக்க போகிறது என்று இந்த கனவானது உணர்த்துகிறது.

கழுகு புறாவினை பிடிப்பது போன்று வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகு ஒரு புறாவை பிடிப்பது போல வந்தால் எதிர்காலத்தில் நீங்கள் ஏதோ பெரிய கவலை அடைய கூடிய ஒரு சில சம்பவங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

கனவில் கழுகின் சிறகுகளை பார்ப்பது போல் வந்தால் என்ன பலன்:

கனவில் கழுகின் சிறகுகளை பார்ப்பது போல கண்டால் உங்களுடைய மிகப்பெரிய ஆசை சீக்கிரம் நிறைவேற போகிறது என்று அர்த்தம்.

கர்ப்பிணி கனவில் கழுகு வந்தால் என்ன பலன்:

கர்ப்பிணி பெண்களுக்கு கனவில் கழுகு வந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கலாம் என சொல்லப்படுகிறது.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil