கனவில் யானை வந்தால் என்ன பலன் | யானை கனவில் வந்தால் நல்லதா..? கெட்டதா..?

Advertisement

யானை கனவில் வந்தால் | Kanavil Yanai Vanthal

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! உலகில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். கனவு வருவது என்பது ஒவ்வொரு மனிதருடைய இயல்பு. நாம் காணும் கனவுகள் அனைத்திற்கும் ஒரு காரணம் மட்டுமில்லை, பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் காணும் கனவுகள் நமக்கு பின்னாளில் நடக்க போவதை முன்கூட்டியே தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு கனவு பலன்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் உங்களுடைய கனவில் யானையை கண்டால் என்ன பலன் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..! 

ஊர்வன கனவில் வந்தால் என்ன பலன்

யானை கனவில் வந்தால் என்ன பலன் – Yanai Kanavil Vanthal Enna Palan:

Elephant Kanavu Palangal in Tamil

 

மதம் பிடித்த யானை கனவில் வந்தால்:

  • மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும் என்பதன் அறிகுறியாகும்.

பெண் யானையை பார்ப்பது போல் கனவு கண்டால்: 

  • கனவில் பெண் யானையை பார்ப்பது போல் வந்தால் குடும்பத்தில் உள்ள பெண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

யானை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

  • யானையின் மீது சவாரி செய்வது போல் கனவில் கண்டால் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி அடையும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும், சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

  • உங்கள் மீது யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் உங்களை தேடி பெரிய பதவி வரப்போகிறது என்று அர்த்தமாகும். மேலும் உங்களுக்கு வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
newஇறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

யானை துரத்துவது போல் கனவு கண்டால்:

  • உங்களை யானை துரத்துவது கனவில் வந்தால் பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும், புதிதாக ஏதோ பிரச்சனையும் நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
  • பரிகாரம்: விநாயக பெருமானை வழிபாடு செய்து வரவேண்டும்.

யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால்:

  • உங்களை யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களுடைய அனைத்து காரியங்களிலும் தோல்வி நீங்கி வெற்றி கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
  • யானைக்கு உணவு கொடுப்பது போன்றோ அல்லது யானை வீட்டு வாசலில் நிற்பது போல் கனவு கண்டால் நன்மைகள் நடக்கப்போகிறது என்று பலன்.

யானையை பார்த்து அச்சம் கொள்வது போல் கனவு கண்டால்:

  • யானையை பார்த்து பயப்படுவது போன்று கனவு கண்டாலோ அல்லது நீங்கள் செல்லும் பாதையை யானை தடை செய்வது போன்று கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

யானை கூட்டம் கனவில் வந்தால்:

  • உங்களது தூக்கத்தில் யானை கூட்டம் கனவில் வந்தால், உங்களது நிதி நிலைமையானது விரைவில் சரியாகும் மற்றும் இது செல்வம் பெறுக ஒரு வாய்ப்பை குறிக்கும்.

குட்டி யானை கனவில் வந்தால்:

  • நீங்கள் உறங்கும் வேலையில் குட்டி யானை கனவில் வந்தால் உங்களக்கு நல்ல நேரம் ஆரம்பிக்க போகின்றது என்று அர்த்தம்.

யானையை கனவில் கண்டால்:

  • கனவில் யானையை கண்டால் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கைக்கூடும். பொதுவாக யானை கனவில் வந்தால் நல்ல பலன் என்று இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்..!

நன்றி..! வணக்கம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

Advertisement