Know This Before Buying A Vehicle on Emi in Tamil
இப்போது நம்மில் பல நபர்கள் EMI -ல் தான் பல பொருள்கள் வாங்குவது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால் வாகனமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த பொருளாக இருந்தாலும் அதனை வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவோமே தவிர, அதற்கு எவ்வளவு வட்டி போடுகிறார்கள் என்று கணக்கிடுவது கிடையாது. ஏன் இது போன்ற நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவும் இல்லை. அதெல்லாம் விடுங்க முக்கியமான விஷயத்தை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க அதனை படித்து அறிவோம்..!
Emi Rules and Regulations in Tamil:
♦ வாகனம் வாங்கும் ஆர்வத்தில் அவர்கள் காட்டும் பேப்பர் அனைத்திலும் கையெழுத்து போட்டு விடுவோம். அதன் பின் நம்முடைய கைக்கு அந்த பொருள் EMI மூலமாக கிடைத்து விடும். அங்கு EMI ரூல்ஸ் பற்றி சொல்லி Emi -யை மாதம் மாதம் செலுத்துங்கள் என்று சொல்வார்கள். அதனை பற்றிய முழு விவரம் இதோ.
♦ முதலில் வாகனத்தை EMI இல் எடுக்க சென்றால் அங்கு நிறைய வங்கி மூலம் அந்த பொருளை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதன் மூலம் வாகனத்தை எடுத்துக்கொண்டால் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் அரசு வங்கி மூலம் கூட அந்த பொருள் or வாகனத்தை EMI ல் எடுத்துக் கொள்ளலாம்.
♦ வாகனம் அல்லது பொருள் எடுக்க போனாலும் அங்கு குறைந்தபட்ச முன் தொகை கட்டவேண்டும் . இதற்கு குறைந்த பட்சம் என்று ஒரு தொகை சொல்வார்கள் அதிகபட்சம் என்று எந்த ஒரு தொகையும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். இதன் மூலமும் உங்கள் வாகனத்தில் EMI வட்டி குறையும் என்பார்கள்.
எப்போது EMI கட்டவேண்டும்:
♦ EMI தொகை ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு விதிகள் உள்ளது. ஒரு சில வங்கிகள் 2 தேதிக்குள் என்பார்கள். இன்னும் சிலர் 5 தேதிக்குள் கட்டவேண்டும் என்பார்கள். அந்த தேதிக்குள் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் பணத்தை போடவேண்டும். அதை அவர்கள் சரியாக உங்கள் வங்கி கணக்கின் மூலம் எடுத்துக் கொள்வார்கள்.
♦ உங்கள் வங்கியில் பணம் இல்லையென்றால் அதற்கு அபராதமாக கட்டணம் செலுத்தவேண்டும். இது ஒவ்வொரு வங்கியை பொறுத்து மாறுபடும். ஒரு வங்கிக்கு 350, ஒரு வங்கிக்கு 500 ரூபாய் என்று மாறுபடும்.
எப்போது முழு தொகை கட்டவேண்டும்:
♦ இப்போது வாகனம் எடுத்து 1 மாதத்திற்குள் பணத்தை முழுவதுமாக செலுத்த நினைத்தால் வங்கிக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கும். அதற்கு நாமும் சரி என்று கையெழுத்து போட்டு கொடுப்போம்.
அப்போது அதனை காண்பித்து உங்களை 3 மாதம் EMI கட்ட சொல்லி பின் முழு தொகையை கட்ட சொல்வார்கள். இந்த ரூல்ஸ் வங்கிக்கு வங்கி மாறுமடும். அதாவது ஒரு சில வங்கியில் 3 மாதம் என்றும் ஒரு சில வங்கியில் 6 மாதம் minimum என்றும் EMI செலுத்தவேண்டும்.
♦ அதன் பின் நாம் முழு தொகையை கட்ட போனால் அந்த முழு தொகைக்கும் இருக்கும் வட்டியை கட்ட தேவையில்லை. ஆனால் Pre Closer Charges என்று ஒரு கட்டணம் செலுத்தவேண்டும். அதாவது நீங்கள் 60,000 ஆயிரம் கட்டவேண்டும் என்றால் அதற்கு 2 சதவீதம் கட்டணம் கணக்கிட்டு செலுத்தவேண்டும். இதுவும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
ஆகவே நீங்கள் EMI -ல் பொருள் வாங்கினால் அதற்கு வங்கியில் எவ்வளவு வட்டி வாங்குகிறார்கள், அபராதம் எவ்வளவு என்று மொத்தமாக தெரிந்துகொள்ளவேண்டும்.
வங்கியில் மொத்தம் எத்தனை கணக்கு உள்ளது தெரியுமா..? அதனை யார் துவங்குவது தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |