Type of Bank Account in Tamil
பொதுவாக நம்முடைய அத்தியாவசிய தேவையில் வங்கியும் ஒன்றாக உள்ளது. வங்கியில் கணக்கு துவங்குவது என்றால் அது ஒன்று SBI கணக்கு மட்டும் தான் இருக்கும். அதற்கு பின் நமக்கு தெரிந்த கணக்கு என்றால் அது Current Account மட்டும் தான். இதனை தவிர மொத்தம் எத்தனை கணக்கு உள்ளது அதனை பற்றிய தெளிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்.
Type of Bank Account in Tamil:
- Current Account
- Savings Account
- Salary Account
- Fixed Deposit Account
- Recurring Deposit Account
- NRI Account
Savings Account in Tamil:
இந்த ஷேவிங் கணக்கு என்பது அனைத்து வங்கியிலும் உள்ளது. மேலும் இதனை ஏன் பயன்படுத்தினார்கள் என்றால் வீட்டில் சேமிக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் அதன் மூலம் நமக்கு வட்டி கிடைக்கும். இதனை பயன்படுத்தும் அனைவரும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு கொடுப்பார்கள்.
இந்த கணக்கை யார் துவங்காலம் என்றால் அது தனி நபர் மற்றும் அல்லது ஜாய்ண்ட் கணக்காக துவங்காலம். இந்த கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு வங்கியானது 2.1/2% முதல் 5% சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
Current Account Details in Tamil:
Current Account என்று அதிகமாக ATM –ல் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதனை யார் துவங்க முடியும் என்றால் இது தொழிலதிபர் மட்டுமே துவங்க முடியும். அல்லது Private Ltd Company துவங்கலாம். இந்த வங்கி கணக்கில் ஒரு நிறுவனத்தில் நிறைய நபர்கள் இருப்பார்கள். அதாவது அதனை பார்த்துக்கொள்ளும் உரிமம் இருக்கும். அவர் அனைவரையும் இந்த கணக்கில் சேர்த்து இருப்பார்கள்.
இந்த கணக்கில் Balance Maintain பண்ணவேண்டும். இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும். அதேபோல் இந்த கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டியும் கிடையாது.
Salary Account Details in Tamil:
இந்த கணக்கு யார் துவக்கமுடியும் என்றால் அது பெரிய கார்ப்பரேட் நிறுவனம் மற்றும் Private Ltd Company –யால் மட்டுமே இந்த கணக்கை துவங்க முடியும். தனி நபரால் இந்த கணக்கை துவங்க முடியாது. இதில் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். எந்த வித ரூல்ஸ் கிடையாது. இதில் Balance Maintain பண்ணவேண்டும் என்று அவசியம் இல்லை. இதில் நிறைய விதமான Charges பிடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
Recurring Deposit Account Details in Tamil:
இந்த கணக்கை யார் துவங்குவார்கள் என்றால் ஒருவர் 1 வருடத்திற்கு பணம் சேமிக்க துவங்கினால் அவர் இந்த கணக்கை துவங்கி 12 மாதம் கட்டி கடைசியில் அதில் ஒரு வட்டியுடன் கிடைப்பது தான் இந்த கணக்கு. இதில் எப்படி வட்டி கிடைக்கும் என்றால் மாதம் மாதம் கிடைக்கும். அதேபோல் வருடத்தின் இடையில் கணக்கை முடிக்க நினைத்தால் அதற்கும் Charges பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த கணக்கை துவங்க முதலில் அவர்களுக்கு 1000 இருந்தால் தான் துவங்க முடியும். இதில் நீங்கள் பணத்தை எடுக்க 6 மாதம் அல்லது 10 மாதத்திற்கு மட்டுமே எடுக்க முடியும் அதற்கு இடையில் எடுக்கமுடியாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா..?
Fixed Deposit Details in Tamil:
Fixed Deposit கணக்கை பற்றி தெரிந்தவர்கள் இருக்கமுடியாது. இதனை யார் பயன்படுத்துவார்கள் என்றால் உங்களுடைய பணத்தை வங்கிக்கு கொடுத்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணம் திரும்ப பெறுவார்கள். அதாவது ஒருவர் 5 வருடத்திற்கு மாதம் மாதம் 10,000 பணம் சேமித்து வந்தால் 5 வருடத்திற்கு Semple வட்டி என்று கணக்கிட்டு நமக்கு கொடுப்பார்கள். இது தான் Fixed Deposit ஆகும்.
இதற்கு வட்டி சதவீதம் என்னவென்றால் ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு வகையான வட்டி கிடைக்கும். அதாவது குறைந்தபட்சம் 5% முதல் 7 to 8% கிடைக்கும்.
Non Resident Indian Account Details in Tamil:
Short NRI கணக்கு என்பார்கள் இதனை யார் துவங்கலாம் என்றால் உதாரணத்திற்கு நீங்கள் இந்தியன் ஆனால் வேலைபார்க்கும் இடம் மட்டும் வெளிநாடு என்றால் இந்தியாவில் சாதாரண கணக்கு துவங்க முடியாது. அதனால் நீங்கள் Non Resident Indian கணக்கு மட்டுமே துவங்க வேண்டும்.
Non Resident Ordinary Account:
இதில் நிறைய வகைகள் உள்ளது. அதில் Non Resident Ordinary Account இது யாருக்கு தேவை என்றால் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார், ஆனால் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றால் அவர்கள் இந்த கணக்கின் மூலம் தான் அந்த பணத்தை அனுப்ப முடியும். அதேபோல் இதில் எவ்வளவு வேணுமானாலும் பணம் போட முடியும் அனுப்பவும் முடியும். அதேபோல் இந்தியாவில் இதற்கு வரி செலுத்தவேண்டும். அதேபோல் இதற்கும் வட்டி கொடுக்கப்படும்.
Non Resident External Account:
இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளில் தான் இருக்கவேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்த பணமாகவும் இருக்கவேண்டும். இந்திய சட்டத்தின் படி இந்த கணக்கின் மூலம் வரவும் வட்டிக்கு எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை.
Foreign Currency Non Resident Account:
இந்த கணக்கு எதற்கு என்றால் நீங்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் அந்த நாட்டின் மதிப்பில் வங்கியில் இருக்கும். இந்த கணக்குக்கு எந்த ஒரு Limit -உம் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். இதில் Balance Maintain பண்ணவேண்டும். இந்த கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி கிடைத்தால் அதற்கு எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |