Bank Locker யாரெல்லாம் பயன்படுத்தலாம்..! அதில் என்ன வைக்கவேண்டும் தெரியுமா..? அதனை பற்றிய முழு விவரம் இதோ..!

Advertisement

Bank Locker Rules 2023 in Tamil

வங்கியில் இந்த லாக்கர் பற்றி சிலருக்கு எதுவும் தெரியாது. அதேபோல் நாம் வங்கிக்கு 2 காரணங்களுக்காக செல்லுவோம். ஒன்று நகை அடமானம் வைக்க, அடுத்து கடன் வாங்குவதற்காக செல்வோம்.

இது மட்டும் தான் பலருக்கும் தெரிந்த காரணம். ஆனால் மூன்றாவதாக ஒரு காரணம் உள்ளது. Bank locker தான் பலரும் நினைப்பது. இது எதற்கு நமக்கு என்பார்கள். அதேபோல் சிலர் நமக்கு லாக்கர் கொடுப்பாங்களா என்று நினைப்பார்கள். அதனை பற்றிய தகவலை பற்றி தெரிந்து கொள்வோம்..!

Bank Locker Rules 2023 in Tamil:

நாம் எப்படி வீட்டில் டிஜிட்டல் லாக்கர் வைத்திருப்போம். அதேபோல் தான் வங்கிக்கு என்று ஒரு தனி லாக்கர் உள்ளது. அந்த லாக்கரில் 3 வகைகள் உள்ளது பெரியது, மீடியம், சிறியது என்று உள்ளது. இந்த லாக்கரை பயனர்களின் தேவையை அறிந்து கொடுப்பார்கள். லாக்கருக்கு என்று கட்டணம் உள்ளது.

 3 வகையான பயனர்களுக்கு இந்த லாக்கர் கொடுப்பார்கள். அதாவது நீங்கள் நகை வைத்திருக்கீர்கள் அல்லது உங்களிடம் நிறைய பத்திரங்கள் உள்ளது. அதனை பத்திரமாக வைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு லாக்கர் கொடுப்பார்கள்.

அடுத்து நீங்கள் NRI வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் அவர் இந்தியாவிற்கு வந்து வந்து செல்லும்பட்சத்தில் அவருடைய பத்திரம் மற்றும் நகைகளை வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

அடுத்து சொந்த ஊரில் இருப்பார். ஆனால் வெளியூர் பயணம் சென்று கொண்டே இருப்பேன் என்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Bank Locker Charges in Tamil:

 bank locker charges in tamil

முன்பு பார்த்தது போல் வங்கி 3 வகையான லாக்கர் உள்ளது. இதற்கு என்று தனி தனியாக கட்டணம் உள்ளது.

வகை  கட்டணம் 
Small  1500 – 4000
Medium  5000 – 8000
Large  10,000 – 20,000

 

இந்த கட்டணம் ஒவ்வொரு வகையான வங்கிகளுக்கு மாறுபடும். அதேபோல் இருக்கும் இடத்தில் உள்ள அதாவது நகர்ப்புறம் மற்றும் சென்னைபோல் உள்ள சிட்டியில் இருக்கீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.

இப்போது அனைவர்க்கும் உள்ள கேள்வி என்னவென்றால் எந்த அளவிற்கு லாக்கர் பாதுகாப்பானது என்று கேட்பீர்கள்.

கண்டிப்பாக பாதுகாப்பானது தான், ஏனென்றால் லாக்கர் வங்கிக்குள் இருப்பதால் வங்கி முழுவதும் கேமரா உள்ளது. அதேபோல் வெளியில் Security நிற்பார். ஆகவே அது மிகவும் பாதுகாப்பானது.

இரண்டாவது நீங்கள் பயன்படுத்தும் வங்கி லாக்கருக்கு 2 சாவிகள் உள்ளது. ஒன்று உங்களிடமும் மற்றொன்று வங்கியிடமும் இருக்கும். இந்த இரண்டு சாவிகளை வைத்து தான் அந்த லாக்கரை திறக்க முடியும்.

மூன்றாவது தீ விபத்து ஏற்படுவதாக இருந்தால் உடனே அங்கிருந்து அலாரம் அடிக்கும். அதனை Security புரிந்துகொண்டு பணிபுரியும் ஆட்களிடம் சொல்லி அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது அனைத்தும் தாண்டி அந்த லாக்கர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு கதவு உள்ளது அதனை திறந்து அதன் பின் தான் லாக்கரை நெருக்க முடியும். ஆகவே திருடர்கள் தொல்லைகளும் கிடையாது.

வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

எத்தனை முறை லாக்கர் பயன்படுத்தலாம்:

 bank locker charges in tamil

ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 முறை பயன்படுத்த முடியும். அதனை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் வங்கியில் உள்ள கையெழுத்துயிட்டு தான் பயன்படுத்த முடியும். அதேபோல் எத்தனை முறை என்று எந்த ஒரு ரூல்ஸ் கிடையாது.

எப்போது உங்களுடைய வங்கி லாக்கரை Black பண்ண முடியும் என்றால் Income Tax டிபார்மண்ட் லிருந்து வந்து தனிநபருடை வங்கி லாக்கரை Black செய்யவேண்டும் என்றால் மட்டுமே செய்ய முடியும்.

நம்மிடம் உள்ள Bank locker சாவி தொலைந்துவிட்டால் நாம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு FIR File செய்துவிட்டு அதன் பின் அந்த பூட்டை உடைக்கவேண்டும்.

ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..!

எப்படி லாக்கர் பெறுவது:

எந்த மாதிரியான வாடிக்கையாளர் என்ற விதத்தை பொறுத்து கட்டணம் குறைவும், அதேபோல் லாக்கர் வேண்டும் என்றால் 20 ரூபாய் BOND பேப்பர் வாங்கி அதில் நம்முடைய பொருள் ஒன்று இங்கு வைத்திருக்கிறேன் என்று வங்கிக்கும் உங்களுக்கும் சட்ட பூர்வமான பத்திரம் எழுதவேண்டும்.

அதில் மூன்று நபர்களின் பெயர் வரை பதியவைத்துக் கொள்ளலாம். அதாவது அந்த மூன்று நபர்களும் வங்கியில் உள்ள பொருளை எடுக்க முடியும் என்பதை பதிவு செய்யவேண்டும். அடுத்து உங்களுடைய போட்டோ கொடுக்கவேண்டும்.

லாக்கரில் என்ன வைக்கலாம்:

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் பத்திரம் வைத்துக்கொள்ளலாம். மேலும் அதில் பணத்தை வைக்கக் கூடாது என்பது அவர்களுடைய ரூல்ஸ். அடுத்து அதில் எந்த வித இரும்பு பொருட்களையும் வைக்கக்கூடாது.

உத்திரவாதம்:

வங்கி லாக்கரில் உள்ள பாதுகாப்புகளை மீறி பொருட்களை எடுத்துவிட்டால் நமக்கு என்ன உத்திரவாதம் உண்டு. எந்த வித கேரண்டியும் கிடையாது. மேலும் RBI ரூல்ஸ் படி உங்களுக்கு 1,00,000 வரை மட்டுமே தரப்படும். நீங்கள் 1 கோடி பொருள் வைத்தாலும் வங்கிலிருந்து உங்களுக்கு கிடைப்பது 1,00,000 மட்டுமே.

ஏனென்றால் நீங்கள் வைக்கும் பொருள் உங்களுக்கு மட்டுமே தெரியுமே தவிர வங்கிக்கு தெரியாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  SBI வங்கியில் வழங்கும் வீட்டு கடன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement