வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

How Did Home Loan Emi May Increase In Repo Rate

இன்றைய பதிவில் வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல் என்ன என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். நமக்கு ஏதாவது தேவை என்றால் அதாவது வீடு கட்டவோ, அல்லது தொழில் தொடங்கவோ பணம் தேவை என்றால் நாம் வங்கிகளில் லோன் வாங்குகிறோம். நாம் எப்படி வங்கிகளில் கடன் வாங்குகிறோமோ அதேபோல வங்கிகளும் அதற்கு மேல் இருக்கும் நிறுவனத்திடம் இருந்து கடனை பெறுகின்றது. இது பலருக்கும் தெரிந்த ஓன்று தான். சரி வாங்க நண்பர்களே ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல் என்ன என்று பார்ப்போம்.

SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

Repo Rate Increase In Reserve Bank in Tamil: 

ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை ( Repo Rate ) உயர்த்தியுள்ளது என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மேலும் சுமை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Repo Rate என்றால் என்ன என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழும்.  Repo Rate என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டியே ரெப்போ வட்டி விகிதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது நாம் எப்படி வங்கிகளில் கடன் பெறுகிறோமோ அதேபோல வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கடன் பெறுகின்றன.   அதனால் Repo Rate உயர்த்தப்படும் போதெல்லாம், வங்கிகளும் நாம் வாங்கிய கடனுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள்.

ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக உயர்த்தியது. அதேபோல ரெப்போ வட்டி விகிதத்தை ஜூன் மாதம் 4.9 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதம் 5.4 சதவீதமாகவும் உயர்த்தியது.  மேலும் செப்டம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 6.25 சதவீதமாகவும் உயர்த்தியது.

இப்போது 2023 பிப்ரவரியில் 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி வரை 7 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..!

 

இதனால் நிதிச் செலவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வங்கிகளின் கடன் வட்டி விகிதம் உயரும். அதுமட்டுமில்லாமல் வாகன கடன், வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான EMI -களும் உயரும். அதேபோல கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மாத EMI உயரும்.

நாம் பெறும் கடன்களில் வீட்டு கடன்கள் தான் பெரிய கடன்களாக கருதப்படுகிறது. அதனால் ரெப்போ வட்டி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI சுமை அதிகரிக்கும். அதிலும் Floating Rate உள்ளவர்களுக்கு தான் பிரச்னை, கடன் Fixed Rate வாங்கிய நபர்களுக்கு இல்லை.

Repo Rate Increase In Reserve Bank

மேலும் 50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த 10 மாதங்களை ஒப்பிடும் போது EMI மாதம் சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி நபர்களுக்கு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை EMI உயர எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் மாதம் மேலும் சுமை அதிகரிக்கும்.

தனிநபர் கடன் பெறுவது எப்படி அதற்கு என்னென்ன தேவைப்படும்..! 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com