SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

What Documents Are Required To Get SBI Home Loan in Tamil

SBI Home Loan

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுகிறார்கள். அப்படி மக்கள் பெறும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்றும். வசதியானவர்காளாக இருந்தாலும் சரி, வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். அந்த வகையில் இன்று SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இந்த பதிவின் வாயியலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..!

What Documents Are Required To Get SBI Home Loan in Tamil:

வீட்டுக் கடன் பெறுவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய நிதி முடிவு ஆகும். இப்போதெல்லாம் வீட்டுக் கடனைப் பெறுவது என்பது ஒரு எளிய செயல் முறையாக இருக்கிறது. எல்லாம் ஒழுங்காக இருந்தால், உங்கள் வீட்டுக் கடனை 24 மணி நேரத்திற்குள் பெற்றுவிடலாம். அப்படி வீட்டு கடன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை இங்கு பார்ப்போம்.

  1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்.
  2. விண்ணப்பதாரரின் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
  3. வாக்காளர் ID, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை இருக்க வேண்டும்.
  4. இருப்பிட சான்று, அதாவது தொலைபேசி கட்டணம் அல்லது மின்சாரக் கட்டணம் இருக்க வேண்டும்.
  5. சம்பளம் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு வணிகச் சான்று தேவை.
  6. கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை, தனிப்பட்ட பொறுப்புகளின் அறிக்கை மற்றும் தனிப்பட்ட சொத்து அறிக்கை போன்றவை இருக்க வேண்டும்.
  7. தற்போதைய வங்கி நிறுவனத்திலிருந்து கையொப்ப அடையாளம் தேவை.
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உத்தரவாதம் தருபவருக்கான தேவையான ஆவணங்கள்:

  1. தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கான அறிக்கை இருக்க வேண்டும்.
  2. உத்தரவாதம் தருபவரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டும்.
  3. அடையாளச் சான்று – வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
  4. தற்போதைய மற்றும் நிரந்தர குடியிருப்புக்கான சான்று வேண்டும்.
  5. உத்தரவாததாரர் சுயதொழில் செய்பவராக இருந்தால், நிறுவனத்தின் முகவரி தற்போதைய வங்கி நிறுவனத்திலிருந்து கையொப்ப அடையாளம் போன்றவை இருக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், வீட்டு கடன் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால், தற்போதைய பணியாளரிடமிருந்து சம்பள சான்றிதழ் மற்றும் TTS சான்றிதழ் அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்கான வரி அறிக்கையின் நகல்களை மேல்கூறிய ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல கடன் பெரும் விண்ணப்பதாரர் சுயதொழில் செய்பவராக இருந்தால்,  கடந்த மூன்று ஆண்டுகளுக்கான IT ரிட்டர்ன்கள் அல்லது மதிப்பீட்டு உத்தரவுகளின் நகல்கள் மற்றும் அட்வான்ஸ் வருமான வரி செலுத்தியதற்கான சான்றின் நகல்களை மேல்கூறிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?

 

தனிநபர் கடன் பெறுவது எப்படி அதற்கு என்னென்ன தேவைப்படும்..! 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com