இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

personal loan eligibility in indian bank in tamil

Personal Loan Eligibility in Indian Bank

கடன் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் ஒரு கடனை அப்ளை செய்வதற்கு முன் அதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும், என்ன ஆவணங்கள் தேவைப்படும், அதற்கான வட்டி எவ்வளவு என்றெல்லாம் என்று ஆராய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உங்கள் கடன் நிராகரிக்கப்படும்போது, ​​அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாக பாதிக்கும் என்பதால், உங்கள் கடன் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தகுதிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கும் உதவும் வகையில் இந்தியன் வங்கியில் Personal Loan பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?

தனிநபர் கடன் என்றால் என்ன.?

ஒரு தனிநபர் கடன் என்பது உங்கள் நிதி கடமைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு கடன் வசதியாகும். நீங்கள் எதையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை என்பதால் தனிநபர் கடனைப் பெறுவது எளிதானது மற்றும் நீங்கள் பணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது.

இந்தியன் வங்கியில் கடன் பெறுவதற்கு தகுதிகள்:

personal loan eligibility in indian bank in tamil

வயது குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 65 வயதும் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
வருமானம் மாதம் 4000 ரூபாய் முதல் 20,000 ரூபாய்
அதிகபட்ச கடன் தொகை 70 லட்சம்
கடன் காலம் 3 வருடம்
பணியில் அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடங்கள் வேலை பார்க்க வேண்டும்.
cibil score 750 
வட்டி 9.65% முதல் 14.90%

 

தேவைப்படும் ஆவணங்கள்:

  1. பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
  2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3
  3. வங்கி கணக்கு புத்தகத்தின் கடந்த ஆறு மாதங்களுக்கான transcation நகல்கள்
  4. அடையாள அட்டை ( வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவையின் நகல்கள்.
  5. இருப்பிட சான்று
  6. சுயதொழில் செய்பவர்கள் மூன்று ஆண்டுகளுக்கான it வருமானம்.
  7. மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கடந்த இரண்டு நிதியாண்டுகளுக்கான படிவம் 16/IT வருமானம்

தனிநபர் கடனை எவ்வாறு பெறுவது.?

இந்தியன் வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் இந்தியன் வங்கிக்கு நேரடியாக சென்று அதிகாரப்பூரவ இணையதளத்திலிருந்து  தனிநபர் கடனுக்கான விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வங்கியின் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிநபர் கடன் பெறுவது எப்படி அதற்கு என்னென்ன தேவைப்படும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking