எழுவாய் பயனிலை செயப்படுபொருள் | Ezhuvai Payanilai Seyapaduporul

Advertisement

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் விளக்கம்..!

நமது பள்ளி பருவத்தில் தமிழ் பாடப்புத்தகத்தில் இலக்கணம் பற்றி படித்திருப்போம். ஆசிரியர் சொல்லி தருகையில் சிலருக்கு புரிந்தபடி இருக்கும். சிலருக்கு ஒன்றும் புரியாமல் ஆசிரியர் சொல்லும் போது தலையை ஆடிக்கொண்டிருப்போம். இருப்பினும் ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி அடைந்து, கல்லூரியையும் முடித்துவிட்டு ஏதோ ஒரு பணியையும் செய்து கொண்டிருப்போம். இருப்பினும் படித்து முடித்த மாணவ மாணவிகள் பலர் அரசு நடத்தும் பொது தேர்வுகளுக்கு தயாராகுவார்கள். அப்பொழுது மீண்டும் இலக்கண குறிப்புகளை படிக்க வேண்டியதாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் இலக்கணத்தில் வரக்கூடிய எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இவற்றை நீங்கள் படிப்பதன் மூலம் ஓரளவு தங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பற்றி. சரி வாங்க எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் விளக்கம்:

மொழியியல் உருவியத்தில், செயப்படுபொருள் எழுவாய் பயனிலை என்பது ஒரு வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாவதாகவும், பயனிலை இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். சரி இந்த எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என்பதற்கு எடுத்துக்காட்டு சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.

எழுவாய் என்றால் என்ன?

வாக்கியத்தில் கருத்துத் தொடங்கும் சொல் எழுவாய் ஆகும்.
எழுவாய் என்பதற்குத் தோன்றும் இடம் என்பது பொருள.

எழுவாய் எடுத்துக்காட்டு: வருண் படிப்பில் திறமையுள்ளவன்
வருண் – எழுவாய்


பயனிலை:

வாக்கியத்தின் கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும்.

பயனிலை எடுத்துக்காட்டு: வினோத் பாட்டுப் பாடினான்.
பாடினான் – பயனிலை


எழுவாயும் பயனிலையும்:

எடுத்துக்காட்டு: கமலேஷ் காலையில் எழுந்தான்.
கமலேஷ் – எழுவாய்
எழுந்தான் – பயனிலை

பெம்பாலும் எழுவாய்ச் சொல் வாக்கியத்தின் முதலில் வரும். ஆயினும், அது இடம் மாறி வருதலுமுண்டு.

எடுத்துக்காட்டு: காலையிலே கதிரவன் உதிக்கின்றான்.
கதிரவன் – எழுவாய்

பயனிலைச் சொல் பெரும்பாலும் வாக்கியத்தின் இறுதியிலே வரும். சில இடங்களில் மாறியும் வரும். புயனிலையை அறிந்தபின் பயனிலைச் சொல்லுடன் யார்? எது? எவை? முதலிய சொற்களில் ஏற்றதொன்றைச் சேர்த்து, வினவினால் எழுவாயை அறியலாம்.

எடுத்துக்காட்டு:

கலைமகள் ஓவியம் வரைந்தாள்
வரைந்தாள் என்னும் பயனிலையுடன் யார்? என்னும் வினாச் சொல்லைச் சேர்த்து, யார் வரைந்தாள்? என வினவினால் கலைமகள் என்பது விடையாக வரும். அதுவே எழுவாயாகும்.


எழுவாய் பயனிலை செயப்படுபொருள் விளக்கம் – Ezhuvai Payanilai Seyapaduporul:

வாக்கியத்தில் எழுவாய் பயனிலை ஆகிய இரு உறுப்புகள் பற்றி முன்பு கற்றீகள். வாக்கியங்களில் எழுவாய் பயனிலையுடன் செயற்படுபொருள் என்றொரு உறுப்பும் இடம்பெறும்.

எடுத்துக்காட்டு:

மங்கை எலுமிச்சம்பழச்சாற்றைப் பருகினாள். இந்த வாக்கியத்தின் பயனிலை பருகினாள். எதைப் பருகினாள்? என்ற வினாவுக்கு எலுமசை;சம்பழச்சாறு விடையாக வரும். எனவே, எலுமிச்சம்பழச்சாறு செயப்படுபொருளாகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement