நெருப்பை கனவில் கண்டால் | Fire Kanavu Palangal in Tamil

Fire Kanavu Palangal in Tamil

நெருப்பு பற்றிய கனவுகள்..!

Fire Kanavu Palangal in Tamil:- பொதுவாக நம் அனைவருக்குமே கனவு என்கிற ஒரு விஷயம் வரும். ஆனாலும் நாம் காணும் அனைத்து கனவுக்கும் பலன் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் நாம் காணும் ஒரு சில நுணுக்கமான கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் கனவு சாஸ்த்திரம் அடிப்படையில் உங்களுடைய கனவில் நெருப்பை கண்டால் என்ன பலன்? நெருப்பை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாமா?

Fire Kanavu Palangal in Tamil

1. உங்களுடைய கனவில் அடிக்கடி நெருப்பை கண்டால் நீங்கள் ரொம்ப கோவக்காரராக இருப்பீர்கள். இல்லையெனில் நோய்களால் தினம் அவஸ்த்தைப்படுபவர்களுக்கு அடிக்கடி நெருப்பு கனவில் வருமாம்.

2. நெருப்பை சிறிய சுடராக உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்புகள் ஏற்படும். பொருள்சேர்க்கை உண்டாகும்.

3. உங்களுடைய கனவில் நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படும் கோபத்தினால் தங்களுக்கு கிடைக்க இருக்கும் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள் என்று அர்த்தமாகும்.

4. தங்களை சுற்றி நெருப்பு எறிவது போல் கனவு வந்தால் உங்கள் உடலில் இருக்கும்  ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று அர்த்தம்.

5. உங்கள் கனவில் தீபத்தை கண்டால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் சிறப்பாக மாறும் என்று அர்த்தமாகும்.

இதையும் படியுங்கள் –> All Kanavu Palangal in Tamil

 

6. தங்களுடைய கனவில் தீயை நீங்கள் மிதிப்பது போல் கனவு கண்டால் நீங்கள் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம்.

7. தங்கள் கனவில் தீ பிடித்து எரிவது போல கனவு கண்டால் தங்களுக்கு ஏதோ தீய செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம்.

8. கனவில் உங்களுடைய உடலானது பற்றி எறிவது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு நெருக்கமானவர்ளுக்கு ஏதோ ஒரு வகையான துன்பம் ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

9. உங்கள் கனவில் கன்னி பெண் எறிவது போல் கனவு கண்டால் தங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும் அல்லது மனதில் சந்தோசம் குடிகொள்ளும் என்று அர்த்தமாகும்.

10. உங்கள் கனவில் வேட்டியில் நெருப்பு பட்டு எரிவதை போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் கவனக்குறைவாக இருந்து பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம் அல்லது வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மனைவிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள் –> இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil