கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது தெரியுமா உங்களுக்கு?

Advertisement

கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது தெரியுமா? | Gas Cylinder Explosion Tamil

பொதுவாக நாம் பயன்படுத்து கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அழிவுகரமான மற்றும் அபராகாரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எந்த ஒரு கேஸ் சிலிண்டர்களை தானாக வெடிப்பது கிடையாது அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது. சரி வாங்க இந்த பதிவில் கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்கிறது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கான காரணங்கள் – Gas Cylinder Explosion Tamil:

கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது இத்தகைய கலவை தீப்பிழம்பாக மாற சிறிய தீப்பொறி அல்லது தீ பற்ற வைக்கும் மூலங்கள் தேவைப்படுகிறது. தீ பொறி வாயு கலவையுடன் கலந்ததும் வாயு கலவையை எரியூட்டி வெடி விபத்து நிகழ்கிறது. இத்தகைய கேஸ் சிலிண்டர் வெடிப்பு பொதுவாக மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பதினால் ஏற்படுகிறது.

ஒரு கேஸ் சிலிண்டரானது ஒரு சதுர செண்டி மீட்டருக்கு 25 கிலோ வரையிலான அழுத்தத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கேஸ் சிலிண்டருக்குள் எரிவாயுவானது ஒரு சதுர செண்டி மீட்டருக்கு ஐந்து முதல் ஏழு வரையிலான அழுத்தத்துடனேயே பராமரிக்கப்படுகிறது.

ஆனால் மக்கள் இந்த கேஸ் சிலிண்டரை தூக்கி எறிவது, வெப்பம் படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளை கையாளும் போது கேஸ் சிலிண்டர் ஒரு வெடி அணுகுண்டாக மாறுகிறது. ஆகவே கேஸ் சிலிண்டர்களை கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி கீழ் படித்தறியலாம் வாங்க.

பாதுகாப்பு முறை – Gas Cylinder Explosion Tamil:

கேஸ் சிலிண்டரை சூடான தண்ணீர் அல்லது அதிக வெப்பம் உள்ள இடத்தில் வைக்க கூடாது.

கேஸ் சொற்ப அளவில் இருந்தாலும் கூட வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் கூடாது. ஏனென்றால் சிலிண்டர் வெப்பமாகும் போது, சிலிண்டருக்குள் இருக்கும் கேஸும் அதிகளவு வெப்பமாகும் இதன் காரணமாக சிலிண்டருக்குள்ளே பெரிய அளவில் அழுத்தம் உண்டாகுமாம், இந்த அழுத்தமானது வரம்பை தாண்டும் பொழுது சிலுண்டாரின் உலோகம் உடைந்து வெடித்து சிதறிவிடுமாம்.

அடுப்பில் சிலிண்டரை தூக்கி எறிவது அல்லது இழுத்து செல்வது போன்ற செயல்களை செய்யவே கூடாது. இவ்வாறு செய்வதால் சிலிண்டரில் செய்யப்பட்டிருக்கும் வெல்டிவுகளில் பாதிப்பு ஏற்பட்டு வாயு கசிவு ஏற்படுத்துகிறது இவ்வாறு கசிவுடன் இருக்கும் சிலிண்டர் வெடி விபத்துக்கு வழிவகுக்கும்.

பொதுவாக நமது வீட்டு பெண்கள் காலை எழும்போது ரெகுலேட்டரை ஆன் (On) செய்வார்கள். பின் இரவு உறங்க செல்லும்போதுதான் திரும்ப அந்த ரெகுலேட்டரை Off செய்வார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயலாகும் ஏனென்றால் ஒரு வேளை உங்கள் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரில் கசிவு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவற்றில் இருந்து வெளியாகும் கேஸ் வெடி விபத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே கேஸ் சிலிண்டரை பயன்படும் ஒவ்வொரு இறுதியிலும் ரெகுலேட்டரை ஆப்(off) செய்து விட வேண்டும்.

கேஸ் சிலிண்டர் பக்கத்தில் மண்ணெண்ணெயை வைக்க கூடாது. இதுவும் ஆபாயகரமான பிரச்சனைகளை உருவாகிவிடும்.

கேஸ் சிலிண்டர் ஏதாவது வாயு கசிவு உள்ள என்பதை தீ குச்சி, மெழுகு வர்த்தி, விளக்கு போன்றவற்றை வைத்து கொண்டு பார்வையிட கூடாது.

சிலிண்டரை எப்போது செங்குத்து நிலையிலும், சமதளத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.

சிலர் ஸ்டவை தரையில் வைத்து பயன்படுத்துவார்கள் இது மிகவும் தவறான முறையாகும். கேஸ் ஸ்டவை எப்பொழுதும் கேஸ் சிலிண்டரைவிட சற்று உயரத்தில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும்.

சிலிண்டரை எப்பொழுது இண்டக்ஷன் ஸ்டவ், லைட் போன்ற எரிசாதனங்களுக்கு பக்கத்தி வைத்திருக்க கூடாது.

அதேபோல் சிலிண்டர் வாழ்விற்குள் இருக்கும் ரப்பர் ஒயரில் பழுது படாமல் இருக்கிறதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்தி கொள்வது மிகவும் சிறந்தது.

உங்களது சமையலறை நன்கு காற்றோட்டமாக இருக்கும் படி அமைத்துக்கொள்வது மிகவும் சிறந்து.

கேஸ் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

முதலில் நீங்கள் பதாடடம் அடையாமல் இருங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் மின்சார சாதனங்கள் இயக்கவோ அல்லது அணைக்கவோ கூடாது. விளக்கு, தீக்குச்சி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்று ஏதாவது எரிந்து கொண்டிருந்தாள் அதனை உடனடியாக அணைத்துவிட வேண்டும். பிறகு ரெகுலேட்டரை ஆப் செய்துவிட்டு சமையலறையில் உள்ள அணைத்து ஜன்னல்களையும் திறந்துவிடுங்கள். இருப்பினும் நீங்கள் எலட்ரிக் பேனை பயன்படுத்த கூடாது. பிறகு கேஸ் அலுவலகத்திற்கு போன் செய்து சொல்லுங்கள். அது வரை பாதுகாப்பான இடத்தில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement