மழை எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How Rain Is Formed in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அன்றாட வாழ்வில் நீர் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நீரும் முக்கியம். நீர் எப்படி நமக்கு கிடைக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அதுபோல மழை எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இன்று இந்த பதிவின் மூலம் மழை எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

மழை எப்படி உருவாகிறது..? 

How Rain Is Formed in Tamil

மழைப் பெய்யும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பெரியவர்கள் மழைப் பொழிந்தால் தான் நமக்கு தண்ணீர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் உயிர்வாழ தேவைப்படும் நீரை மழை தான் தருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் மழை எங்கிருந்து வருகிறது எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேகங்கள் என்று கூறலாம். காற்று நீராவியால் நிரப்பப்படும் போது தான் மேகங்கள் உருவாகின்றன.

நாம் வாழும் பூமியில் இருக்கும் நிலத்தடி நீர் என்று சொல்லக்கூடிய ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் நீரை சூரியன் தனது வெப்பத்தால் உறிஞ்சி ஆவியாக்குகிறது.

அப்படி சூரியன் வெப்பத்தால் உறிஞ்சி ஆவியாக்கும் நீரை நீராவியாக்கி மேகங்களில் சேர்க்கிறது. இதுபோல நீராவியாக மாற்றும் நீரை மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கின்றன.  

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

குளிர்ந்த காற்றை விட வெப்பமான காற்று அதிக நீராவியைக் கொண்டிருக்கும். அந்த காற்று அதிகமாக குளிர்விக்கப்படும் போது அது நமக்கு மேகக்கூட்டங்களாக தெரிகின்றன. மேகத்தை உருவாக்கும் நீர் அதிக குளிர்ச்சியான சூழ்நிலையில் பெரிய துகள்களாக வளர்கின்றன.

இப்படி  மேகத்தில் இருக்கும் நீர் துகள்களின் அடர்த்தி அதிகமானதும் பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ் நோக்கி மழையாக பெய்கின்றன. அதுபோல நீராவி அடர்த்தியாக இருப்பதால் தான் மேகங்கள் கருப்பு நிறத்தில் நமக்கு தெரிகின்றன.  

மேகங்கள் நீராவி அடர்த்தியாக இருப்பதால், சூரியனில் இருந்து வெளியேறும் அதிக ஒளி சிதறடிக்கப்பட்டு அவற்றின் கீழ் பகுதிகளுக்கு இருண்ட தோற்றத்தை கொடுக்கிறது. இதனால் தான் மழை பெய்யும் போது வானம் இருட்டாக இருக்கிறது.

அதுபோல  எல்லா மேகங்களும் நீரை சேர்த்து வைப்பதில்லை. அதிகளவு நீரை சேர்த்து வைக்கும் மேகங்கள் மட்டும் தான் நமக்கு மழையாக பொழிகின்றன. எல்லா இடங்களிலும் நீர் மேகம் இல்லாத காரணத்தால் தான் எல்லா இடத்திலும் மழை பொழிவதில்லை. இதனால் தான் மழை ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் பெய்வதில்லை. 

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் உங்களுக்கு தெரியுமா..?
வானவில் தோன்ற காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 
Advertisement