மத்திய அரசின் சுகாதார அட்டை இலவசமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி?

Advertisement

How to Apply National Health ID Card Online in Tamil 2021

national health id card benefits in tamil: மத்திய அரசானது டிஜிட்டல் ஹெல்த் ID கார்டினை அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் சுகாதார அட்டையை எப்படி நாம் ஆன்லைன் மூலம் அப்ளை செய்வது, இதன் மூலம் நமக்கு என்ன நன்மைகள் பற்றியெல்லாம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த சுகாதார அட்டையினை நாம் ஆன்லைன் வழியாகவும் அல்லது அருகில் இருக்கக்கூடிய தனியார் அல்லது அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம். இதனை பெறுவதற்கு கண்டிப்பாக உங்களிடம் மொபைல் மற்றும் ஆதார் கார்ட் இருக்க வேண்டும். இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சுகாதார நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்துவிடும். நமது நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருந்து கடைகளும் இதனுடன் இணைய வாய்ப்புள்ளது. இந்த Health ID கார்டில் உங்களுடைய X ray ஸ்கேன், MRI ஸ்கேன் ரிப்போர்ட் போன்ற அனைத்தையும் இதில் அப்லோட் செய்துக்கொள்ளலாம்.

இந்த Health ID கார்டானது நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மருத்துவர்கள், கண்டுப்பிடிப்பாளர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. நோயாளிகளுக்கு உடலில் இதற்கு முன்பு என்ன மாதிரியான நோய்கள் இருந்தது, அதற்கான என்ன மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டார்கள் பற்றிய விவரங்களையும் அதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ள உதவிகரமாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க Health ID கார்டினை ஆன்லைன் மூலம் (health id card benefits in tamil) ஈசியாக நாம் எப்படி அப்ளை செய்து பெறலாம் என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

ஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி?

Ayushman Bharat Yojana Card Apply Online in Tamil:

Step: 1

முதலில் கூகுள் க்ரோமில் ndhm என்பதை டைப் செய்துக்கொள்ளுங்கள். அவற்றில்  https://healthid.ndhm.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

step: 2 இப்பொழுது அவற்றில் Create your Health ID என்று இருக்கும். அவற்றில் நாம்
மூன்று விதமாக Apply செய்யலாம். அதாவது முதலில் ஆதார், அடுத்து ஓட்டுநர் உரிமம் சான்றுகள்,  எதுவும் இல்லையென்றால் கீழே மூன்றாம் ஆப்ஷன் மூலம் Apply செய்யலாம்.

step: 3 உதாரணத்திற்கு நாம் மூன்றாவதாக உள்ள ஆப்ஷன் மூலம் இந்த National Health ID Card-ஐ ஆன்லைன் மூலம் எப்படி அப்ளை செய்யலாம் என்று பார்ப்போம். அதற்கு நீங்கள் Click Here என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது மொபைல் எண் உள்ள இடத்தில் தங்களுடைய மொபைல் எண்ணினை குறிப்பிடவும். கீழே ஸ்க்ரோல் செய்து I Agree என்ற இடத்தில் டிக் செய்து submit என்பதை கொடுக்க வேண்டும்.

step: 4 மொபைல் எண் பதிவு செய்த பிறகு தங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த OTP எண்ணை அதில் கொடுத்து submit செய்யவும்.

step: 5 OTP எண் கொடுத்த பிறகு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், PHR அட்ரஸ், அதற்கான ஒரு password, நீங்கள் இருக்கக்கூடிய State மற்றும் மாவட்டம் என்ன என்பதை தேர்வு செய்து கடைசியாக submit பட்டனை கிளிக் செய்யவும்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

 

step: 6 இப்போது உங்களுடைய ப்ரொபைல் இது போன்று create ஆகிவிடும். இதுதான் உங்களுடைய Health ID Card. நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவலும் இந்த கார்டில் பதிவாகிவிடும்.

step: 7 profile-ல் உங்களுடைய புகைப்படம் வைக்க வேண்டுமென்றால் Account ஆப்ஷனில் Edit Profile என்பதை கிளிக் செய்யவும். அவற்றில் click to upload என்பதை தேர்வு செய்யவும்.

step: 8 உங்களுடைய photo எந்த போல்டரில் உள்ளதோ அதை தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். இதிலே உங்களுடைய password, பிறந்த தேதி, KYC  திருத்தம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் என்னென்ன benefits என்பதையும் அதில் ஓபன் செய்தால் தெரிந்துக்கொள்ளலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement