அசல் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய விஷயங்கள்!

Advertisement

அசல் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய விஷயங்கள்! How to Get Duplicate Copy of Property Documents in Tamil!

How to Get Duplicate Copy of Property Documents in Tamil – நண்பர்க்ளுக்கு வணக்கம்..! அசல் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால் நாம் உடனே செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நமது சொத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக அந்த சொத்தின் அசல் பத்திரம் தேவைப்படும். அந்த அசல் பத்திரம் இல்லை என்றால் நம்மால் கண்டிப்பாக யாரிடமும் கடன் பெற முடியாது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற முடியாது. வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் தேவைப்படும். ஆக அந்த ஆவணங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் அந்த ஆவணத்தை தொலைத்துவிட்டால் அது தொடர்பானம் நகல் ஆவணங்களை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டு வரி கட்டுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

How to Get Duplicate Copy of Property Documents in Tamil!

FIR பதிவு செய்ய வேண்டும்:

உங்களுடைய சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்றால் உடனே நீங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்து, FIR பதிவு செய்ய வேண்டும். அதாவது உங்களது அசல் சொத்து ஆவணம் தொலைந்துவிட்டதாக கூறி FIR பதிவு செய்யுங்கள். இது சொத்தின் உரிமையாளரின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்தித்தாள் விளம்பரம்:

உங்கள் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டது என்றால் FIR பதிவு செய்தபிறகு நீங்கள், செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும். அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும். அந்த விளம்பரத்தில் சொத்தின் விவரங்கள், இழந்த ஆவணங்கள் பெயர் மற்றும் காணாமல் போன ஆவணங்களை யாராவது கண்டறிந்தால் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிய அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும்.

பகிர்வு சான்றிதழ்:

ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்குச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்றால், அதனை மீண்டும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது நீங்கள் FIR பதிவு செய்த நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் போன்றவற்றை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைக்க வேண்டி இருக்கும். ஆக சொத்து சம்பந்தப்பட்ட அசல் சான்றிதழ் தொலைந்து போனால். கண்டிப்பாக முதலில் FIR பதிவு செய்யுங்கள், அதற்கு அடுத்ததாக செய்தித்தாளில் விளம்பரம் செய்யுங்கள்.

பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை:

சொத்தின் விபரங்கள், தொலைந்த ஆவணங்கள், FIR நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி?

தொலைந்து போன ஆவணக்களுக்கு நகல் பத்திர விண்ணப்பம்:

சொத்து பத்திரத்தின் நகல்களைப் பெற, சொத்துப் பதிவாளரிடம் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement