பங்கு சந்தை | Share Market
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பங்குசந்தையில் முதலீடு செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம். பங்கு சந்தை என்பது ஒரு புதிதாக நிறுவனத்தை தொடங்குவதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் என்னிடம் 5 லட்சம் மட்டுமே உள்ளது. அப்போது இன்னும் 5 லட்சத்தை நண்பர்களுடனோ அல்லது தெரிந்தவர்களிடமோ இருந்து பணத்தை பிரட்டி முதலீடு செய்வதே பங்கு சந்தையாகும். பங்கு சந்தையில் முதலீடு செய்யும்பொழுது பணத்தின் மதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். இப்போது பங்கு சந்தை என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும் அதில் எப்படி முதலீடு செய்வது என்று நம் பதிவின் மூலம் காணலாம் வாங்க.
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன |
பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி.?
பங்கு சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்தபின்பு முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் ஷேர் மார்க்கெட்டில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜமானதாகும்.
பங்கு சந்தையில் பங்கு வாங்குவதற்கு மூன்று விதமான Account உள்ளது அவை Bank Account, Demat Account, Trading Account ஆகியவையாகும்.
demat account என்பது இந்திய பங்கு வர்த்தக முறையில் ஒருவர் வாங்கும் பங்குகளை கணக்கில் கொண்டு ஏற்படுத்தப்படும் மின்னணு கணக்காகும். அதாவது ஒரு வங்கியில் கணக்குகளை சேமிப்பதற்கு முன்பு ஒரு account எவ்வாறு ஓப்பன் செய்க்கின்றமோ அதே போல்தான் பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கும் demant account ஓப்பன் செய்யப்படுகிறது.
Trading Account என்பது share வாங்குவதற்கு பயன்படும் அதாவது ஒரு புரோக்கர் மூலம் பதிவு செய்யும் பொழுது இந்த Trading account ஓப்பன் செய்து தருவார்கள்.
ஒரு நிறுவனத்தில் பங்கு வாங்கும் பொழுது நேரடியாக வாங்க முடியாது. அந்த நிறுவனத்தில் புரோக்கரின் மூலம் மட்டுமே ஷேர் வாங்க முடியும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு தேவையானவை:
முதலில் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு அந்த நிறுவனத்தில் உள்ள தரகரை(Broker) தேர்ந்தெடுத்து. அவர்களின் மூலம் உங்களுடைய கணக்கை தொடங்க வேண்டும்.
அப்படியில்லை என்றால் ஆன்லைன் மூலம் நீங்களே groww app, zerodha app ,angelone, upstock இது போன்ற ஆப் மூலம் fintech companie யில் உங்களுடைய முதலீட்டு கணக்குகளை இதன் மூலம் தொடங்கலாம்.
பங்கு சந்தையில் கணக்கை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள்:
- PAN கார்டு
- ஆதார் கார்டு
- புகைப்படம்
- மொபைல் நம்பர்
- email id
- address proof
இவை தொடர்புடைய ஆவணங்கள் மட்டும் தேவையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்த்த பிறகு உங்களுடைய Demat Account திறக்கப்படும். அதன் பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த Broker மூலம் ஒரு தனிப்பட்ட Client id யை பெறுவீர்கள். இந்த id உங்கள் Demat கணக்கை ஆன்லைன் மூலம் அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |