How To See Waveform in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..? இன்றைய பதிவில் உங்களுக்கு பயனுள்ள தகவலை பற்றி தான் கூறப் போகிறோம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்லப் போகிறோம் என்றாலே சந்தோசமாக இருக்கும். கடற்கரைக்கு செல்ல பிடிக்காது என்று யாராவது சொல்வார்களா..?
கடலில் இருக்கும் நீர், காற்று, அலைகள் என்று பல விஷயசங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். கடற்கரைக்கு செல்ல போகிறோம் என்று சொன்னாலே குழந்தைகள் அவ்வளவு சந்தோசம் அடைவார்கள். அதுபோல கடலில் வரும் அலைகள் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..?
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?
கடலில் அலை எப்படி உருவாகிறது..?
நாம் வாழும் இந்த பூமியில் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. உதாரணமாக, சூரியன் உதிப்பது, சந்திரன் தேய்வது, பூக்கள் மலர்வது அதுபோல மழைப் பொழிவது போன்ற பல விஷயங்கள் எப்படி நிகழ்கிறது என்று நமக்கு இன்றளவிலும் வியப்பாக தான் இருக்கிறது.
அதுபோல தான் கடலில் அலை வருவதும் இருக்கிறது. அவ்வாறு ஆறு, குளம், ஏரி என்று பல பெரிய நீர்நிலைகள் இருக்கின்றன அதில் மட்டும் ஏன் அலைகள் வரவில்லை, கடலில் மட்டும் அலைகள் எப்படி வருகிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்ப்போம்.
சூரியன், பூமி, நிலவு என்ற மூன்றிருக்கும் இடையில் நிகழும் ஒருவிதமான ஈர்ப்பு விசையின் காரணமாக தான் கடலில் அலைகள் உருவாகின்றன. இருந்தாலும், அலைகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நிலவு தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.காரணம், நிலவின் ஈர்ப்பு விசையானது கடலின் அலைகளை பொங்கி எழச்செய்யும் அளவிற்கு வலிமையானதாக இருக்கிறது. அதனால் தான் கடலில் அலைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.
மழை எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
கடற்கரையில் மணல்கள் எங்கிருந்து வருகிறது..?
பூமியின் சுழற்சியினாலும், நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாகவும் அதேபோல காற்றின் வேகத்தாலும் அலைகள் உருவாகி அவை கரையை நோக்கி வேகமாக வரும் போது கடலில் இருக்கும் சிறு சிறு கற்களையும் சேர்த்து கொண்டு வருகிறது.
அப்படி வரும் கற்கள் ஒன்றோடு ஓன்று உரசிக்கொண்டும், மோதிக்கொண்டும் வரும் போது அவை மாவு போல அரைக்கப்பட்ட மணல்களாக மாறுகின்றன. இப்படி உருவாகும் மணல்களை தான் அலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றன.அலைகளால் தான் கடற்கரையில் மணல்கள் சேர்கின்றன. இப்படி தான் எல்லா கடற்கரையிலும் மணல்கள் உருவாகின்றன.
இடி, மின்னல் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |