பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் | How to Use Scrub Wash in Tamil
வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயன்படும் வகையில் தகவல்களை தினமும் சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நம் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் துரு பிடிக்காமலும், பிரியாமல் இருப்பதற்கு என்ன வழிகள் என்று தெரிந்துகொள்வோம். புதிதாக வாங்கிய கம்பி நார் ஒரு நாள் மட்டும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மறு நாளே பாத்திரம் தேய்க்கும் போது கம்பி நார் நாராக தனியாக வந்துவிடும். பாத்திரம் தேய்க்கும் போது கஷ்டப்படுவீர்கள். மறுபடியும் ஒரு பாத்திர கம்பி வாங்குவீர்கள். இப்படி வாங்கி கொண்டே போனால் என்ன ஆகுறது நிலைமை. இதற்கு ஒரு முடிவு வேண்டுமே என்று நினைப்பர்வர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாங்க கம்பி நாரை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் ⇒இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!
தேவையான பொருட்கள்:
- ஷாம்பூ
- தண்ணீர்
செய்முறை:
முதலில் அடுப்பை பத்த வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நல்லா கொதிக்கும் போது புதிதாய் வாங்கிய கம்பி நாரை போட வேண்டும். அதில் 1 தேக்கரண்டி ஷாம்பூ அல்லது பாத்திரம் தேய்க்கும் லிக்விடு சேர்க்கவும். பின் அடுப்பை குறைத்து விட்டு 5 நிமிடம் கொதிக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சூடு குறைந்த பிறகு வெந்நீரில் இருக்கும்கம்பி நாரை எடுக்கவும்.
இப்போது கம்பி நாரை எடுத்து பார்த்தால் உங்களுக்கு மாற்றம் தெரியும். கம்பி நார் அழுத்தமாக இருக்கும். இப்போது இந்த கம்பி நாரை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தி பாருங்கள்.
கம்பி நாரை புதிதாய் பயன்படுத்துவதற்கும், இந்த மாதிரி செய்து பயன்படுத்துவதற்கும் உள்ள மாற்றத்தினை உணர்வீர்கள். இந்த மாதிரி பயன்படுத்துவதன் மூலம் கம்பி நார் துருபிடிக்காமலும், பிரியாமலும் இருக்கும்.
இந்த டிப்ஸை பயன்படுத்தி பாத்திரத்தை பளபளவென்று மாற்றுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |