ICU Full Form in Tamil – ICU என்பதன் தமிழ் விரிவாக்கம்

Advertisement

ICU என்பதன் தமிழ் விரிவாக்கம்

வணக்கம் நண்பர்களே மருத்துவமனையில் நோயாகிளிகளுக்கு பலவகையான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு விதமான சிகிச்சை பிரிவுகளுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ICU சிகிச்சை பிரிவு. இந்த பிரிவின் தமிழ் விரிவாக்கம் என்ன. எதற்க்காக ICU-யில் எந்த நோயாகிலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

ICU Full Form in Tamil:

  • ICU என்பதன் தமிழ் விரிவாக்கம் தீவிர சிகிச்சைப் பிரிவு என்று அழைக்கப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவு என்றால் என்ன?

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளைக் கவனிக்க வேண்டி அவர்களைத் தனிப் பிரிவில் வைத்து, சிறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரால் சிகிச்சை அளிக்கப்படும் இடம் ஆகும். தனிக் கவனிப்பு, சிறப்புச் சிகிச்சையோடு நோயாளிகளுக்குத் தொற்று ஏற்படாமல், வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது.

இது பொது சிகிச்சைப் பிரிவு போல் இல்லாமல் இந்தப் பிரிவில் சிறந்த மருந்துகள், மருத்துவக் கருவிகள், நொடிதோறும் கண்காணிக்கும் பொறிகள் முதலியன பயன்பாட்டுக்கு இருக்கும்.

இந்த பிரிவில் தீவிரத் தொற்று, உள்ளுறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு, மூளைப் பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்த பின் கவனிப்பு போன்ற காரணங்களுக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைச் சேர்ப்பர்.

RIP Full Form in Tamil
MLA Full Form in Tamil
AM/PM Full Form in Tamil
LLB Full Form in Tamil
Phd Full Form in Tamil
BCA Full Form in Tamil

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement