IFHRMS Login செய்வது எப்படி? | IFHRMS Login in Tamil
IFHRMS Login in Tamil:- தமிழ்நாடு அரசு IFHRMS என்ற ஆன்லைன் போர்ட்டலை நிறுவியுள்ளது. IFHRMS என்பது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பைக் குறிக்கிறது. IFHMRS உள்நுழைவு பக்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/oamlogin. சரி இந்த பதிவில் IFHRMS கருவூலம் என்றால் என்ன?, IFHMRS அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் எப்படி Login செய்வது? மற்றும் IFHMRS குறித்த முழுமையான விரங்களை தெரிந்து கொள்வோம்.
கருவூலம் என்றால் என்ன?
IFHRMS என்பது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தை (IFHRMS Salary bill) பற்றியது. IFHRMS என்பதன் முழு விரிவாக்கம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் ஆகும். ஆங்கிலத்தில் (Integrated Financial And Human Resource Management System). இந்த திட்டத்தில் தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ளது. IFHRMS இணையதள வசதி கொண்ட கணினி ஆகும். இது ஒரு பாதுகாப்பான அமைப்பாகும். எப்படி என்றால் இதனை கணினி வழியாக IP அட்ரஸை பயன்படுத்தி மட்டுமே அந்தந்த அலுவலகத்தில் பயன்படுத்த முடியும் வேறு யாராலும் பயன்படுத்த முடியாது.
IFHRMS பயன்கள்:
- இந்த IFHRMS இணையதளம் வழியாக அரசு ஊழியர்களின் சம்பளம் Bill-ஐ மிக எளிதாக போட்டுவிடலாம்.
- IFHRMS-ல் பில் போட்ட உடனே Token no, ECS நம்பர் வந்து விடும்.
- இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.
- நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.
- Treasury-க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.
- தேவையில்லாமல் Treasury-யில் Bill நிறுத்தி வைக்க முடியாது.
- Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.
- உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.
IFHRMS-யின் விவரங்கள்:
நிறுவனம் | IFHRMS |
முழு விரிவாக்கம் | Integrated Finance and Human Resources Management System |
அதிகாரப்பூர்வ இணைதளம் | https://www.karuvoolam.tn.gov.in/ |
அதிகாரம் | Finance Department , Government of Tamil Nadu |
துறை | Department of Treasuries and Accounts |
IFHRMS Helpline Number:
IFHRMS இணையதளத்தில் உள்நுழைவு தொடர்பான ஏதேனும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், கருவூலம் IFHRMS-யின் வாடிக்கையாளர் ஆதரவு எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். Karuvoolam.tn.gov.in-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பின்வரும் உதவி மைய எண் கொடுக்கப்பட்டுள்ளது – 04440172172.
IFHRMS துறைகள்:-
பின்வரும் தமிழ்நாடு துறைகள் தொடர்பான சேவைகளை IFHRMS உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்திப் பெறலாம்.
- Treasuries & Accounts
- Local Fund Audit
- Small Savings
- Pension
- Co-Operative Audit
- Government Data Center
- Chief Auditor of Statutory Boards
How to login in IFHRMS in Tamil
ஸ்டேப்: 1
- பயனர்கள் முதலில் IFHRMS-யின் https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/oamlogin என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- பின் இணையதளத்தின் முகப்பு பகுதியின் இடது பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள User ID என்பதில் அரசு ஊழியர்களுக்கு IFHRMS No என்று கொடுத்துறுப்பார்கள் அந்த நம்பரை User ID என்பதில் உள்ளிடுங்கள்.
- அதன் பிறகு Password என்பதில் தங்களது Date of Birth-ஐ உள்ளிட்டு Sign In என்பதை கிளிக் செய்து Sign In செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் IFHRMS-யில் லாகின் செய்யும் process. IFHRMS கருவூலம் இணையதளத்தில் நீங்கள் இவ்வாறு உள்நுழையலாம். உங்களுக்கு User ID அல்லது Password தெரியவில்லை என்றால். கவலையடைய வேண்டாம் உங்களது User ID அல்லது Password-ஐ பெற விரும்பினால், தயவுசெய்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ள உதவி எண்ணைப் பயன்படுத்தவும்.
IFHRMS போர்டில் இருந்து கட்டணச் சீட்டு பதிவிறக்குவது எப்படி?
- IFHRMS உள்நுழைவு போர்ட்டலுக்குச் செல்லவும்
- karuvoolam.tn.gov.in TNTA OAM பக்கத்தில் உள்நுழைக
தவிர, IFHRMS பக்கத்தில், OPEN என்பதைக் கிளிக் செய்யவும் - அடுத்த பக்கத்தில் நிதி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- ebsprd.karuvoolam.tn.gov.in ஐ திறக்கவும்
- அடுத்த பக்கத்தில், ஊதியம் விருப்பத்தை கிளிக் செய்யவும்
- முடிவுகளை கிளிக் செய்யவும்ம்
- IFHRMS உள்நுழைவு டாஷ்போர்டில் சம்பளப்பட்டியல் முடிவுகள் பக்கத்தைத் திறக்கவும்.
- பிறகு காலப் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
- பின்பு பில் வகையில், வழக்கமான சம்பளத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- கட்டணக் குழுவைத் தேடுங்கள்
- Payslip விருப்பத்திற்குச் சென்று ஆவண இணைப்பைக் கிளிக் செய்யவும்
- IFHRMS பில் பேஸ்லிப்பை pdf வடிவத்தில் பதிவிறக்கவும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |