இந்திய பெண் விளையாட்டு வீரர்கள் வரலாறு..! Indian Sports Womens List..!
இந்திய விளையாட்டு வீராங்கனைகள் / Famous Sports Women’s History: பொதுநலம்.காம் பதிவில் இந்திய நாட்டில் சாதனை புரிந்த விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் வரலாறுகளை பற்றி பார்க்க போகிறோம். பெண்கள் இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். டென்னிஸ், குத்து சண்டை, சதுரங்க போட்டிகள், மல்யுத்தம், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போன்ற பல விளையாட்டுகளில் பெண்கள் சாதனை புரிந்திருக்கின்றனர். சரி வாங்க அவர்களின் வரலாற்று பட்டியலை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு..! Scientist Name And Invention..! |
ராணி ராம்பல் வரலாறு / Rani Rampal Biography:
sports women in india: ராணி ராம்பல் இந்திய ஹாக்கி விளையாட்டு பெண் வீராங்கனை ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டில் உலக கோப்பையை வென்றவர். ராணி ராம்பல் ஷாபாத் மார்க்கண்டா என்னும் ஹரியானாவில் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பிறந்தவர். ராணி ராம்பல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதை இன்னும் கடைபிடித்து வருகிறார்.
விருதுகள்: இவர் இந்தியாவின் இளம்பெண் வீரர் என்ற விருதை பெற்றுள்ளார்.
மானிகா பத்ரா வரலாறு / Manika Batra Life History:
டென்னிஸ் வீராங்கனை பெயர்கள்: மானிகா பத்ரா இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஆவார். மானிகா பத்ரா டேபிள் டென்னிஸில் உலக அளவில் 47-வது இடத்தில் இருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளார்.
மானிகா பத்ரா வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு கவனம் செலுத்திக்கொண்டு வருகிறார். இவர் டெல்லியில் 1995 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 15ஆம் தேதியில் பிறந்தார்.
சாதனைகள்: இவர் 2018 ஆம் ஆண்டில் ஆசியா நடத்திய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றார். அடுத்து 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் டேபிள் டென்னிஸில் தனிநபர் தங்கம் வென்ற முதல் பெண் மானிகா பத்ரா.
விருதுகள்: டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவருக்கு அர்ஜுனா விருது கிடைத்தது.
மேரி கோம் வரலாறு / Mary Kom Boxer History:
மேரி கோமின் முழு பெயர் “Chungneijang Mary Kom Hmangte”. இவர் குத்துச்சண்டை போட்டிகளில் நன்கு கைத்தேர்ந்தவர். மேரி கோம் சமீப காலத்தில் மாநிலங்களவையில் உறுப்பினராக சேர்ந்துவிட்டார்.
மேரி கோம் கங்காதே என்னும் மணிப்பூரில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி 1983 ஆம் வருடத்தில் பிறந்தவர். இவர் உலக அமெச்சூர் குத்துசண்டை போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
விருதுகள்: இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சானியா மிர்சாவின் வரலாறு / Sania Mirza History:
சானியா மிர்ஸா இந்திய டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் பிறந்த இடம் மும்பையில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டு பிறந்தார்.
சானியா மிர்ஸா இந்தியாவில் 6 கிராண்ட்ஸ்லாம்(grand slam) பட்டங்களை தனியாக வென்றவர். சானியா மிர்சா 2013 ஆம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆசியாவின் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் தோஹா ஆசிய விளையாட்டுகளில் சில்வர் மெடல் பதக்கம் வென்றவர்.
விருதுகள்: இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சாய்னா நேவால் வரலாறு / Saina Nehwal Biography:
சாய்னா நேவால் இந்திய விளையாட்டு வீராங்கனை. இவர் பூப்பந்து(Badminton) விளையாட்டில் சிறந்த பெண் வீராங்கனை.
சாய்னா நேவால் ஹிசார் ஹரியானாவில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி 1990 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் படைத்த சாதனைகள் 2016-ல் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் வென்றார்.
அதோடு 2015 – ல் இந்திய ஓபனில் சாம்பியனும், 2014 – ல் சீனா ஓபனில் சாம்பியன்ஷிபும், 2012 – ல் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றார்.
விருதுகள்: இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சாக்ஷி மாலிக் வரலாறு / Sakshi Malik History:
சாக்ஷி மாலிக் இந்திய மல்யுத்த வீராங்கனை ஆவார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக். சாக்ஷி மாலிக் மேலும் ஒலிம்பிக்கில் நிறைய தங்க பதக்கங்களை வெல்ல கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இவர் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டில் ரோஹ்தக் நகரில் பிறந்தார். சாக்ஷி மாலிக் 2015 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றார்.
முக்கியமாக இந்தியாவில் ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் பெண்மணி மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
விருதுகள்: இவர் பத்ம ஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இது போன்ற பல இந்திய பெண்மணி வீராங்கனைகளின் வரலாறு தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம்.
நன்றி வணக்கம்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |