Isabgol in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பல மருத்துவ பயன்களை தனக்குள் கொண்டுள்ள இசப்கோல் பற்றிய சில குறிப்புகள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக இந்த இசப்கோலில் உள்ள பல மருத்துவ குணங்களை பற்றி நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதன் பிறப்பிடம், வேறுபெயர்கள் போன்ற தகவல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இந்த பதிவில் இசப்கோல் பற்றி விரிவாக காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
Isabgol Meaning in Tamil:
Isabgol அல்லது சைலியம் என்பது பிளாண்டகோ இனத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இந்த பிளாண்டகோ இனத்தில் 200-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இந்த இசப்கோல் அல்லது சைலியம் உமி மலச்சிக்கல் மற்றும் லேசான வயிற்றுப்போக்கு மருந்தாக திகழ்கிறது.
இந்த இசப்கோல் தாவரம் வறண்ட மற்றும் குளிர்காலங்கள் இரண்டு பருவநிலையிலும் வளர கூடியது. இசப்கோல் என்பது 30 – 40 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய ஒரு வருடாந்திர மூலிகைத் தாவரமாகும்.
மேலும் இதன் இலைகள் எதிரெதிரே வடிவில் வளரக்கூடியது. இது நன்கு வளர்ந்த குழாய் வேர்களை கொண்டுள்ளது. இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்கும். பயிரிடப்பட்ட 60 நாட்களுக்கு பிறகு இத்தாவரம் பூக்கும்.
இதன் விதைகள் நன்கு முற்றிய பிறகு அதனை அறுவடை செய்து அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உமி தான் பல வகையில் பயன்படுகிறது.
பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:
இதன் பிறப்பிடம் இதுதான் என்று தெளிவாக கூறுவதற்கு இல்லை. சைலியம் பல ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் இந்தியாவிலும் வணிகத்திற்காக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் முக்கியமாக வடஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இசப்கோல் என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் அஸா கோல் என்று அழைக்கப்படுகிறது.
பயன்கள்:
- சைலியம் முக்கியமாக உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
- மலச்சிக்கல் மற்றும் லேசான வயிற்றுப்போக்கு மருந்தாக திகழ்கிறது.
- உயர் இரத்த கொழுப்பை குறைக்க உதவுகிறது.
- வகை 2 நீரிழிவு நோயிற்கு சைலியம் உமி பயன்படுகிறது.
- கால்நடைகளுக்கும் மருந்தாக சைலியம் உமி திகழ்கிறது.
- சைலியம் ஐஸ்கிரீம் மற்றும் பிற உறைந்த இனிப்புகளில் அவற்றின் திடமான தன்மையை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்=> இசப்கோல் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |