கடன் பத்திரம் எழுதுவது எப்படி?

Advertisement

Kadan Pathiram Format in Tamil | கடன் பத்திரம் எழுதும் முறை | Kadan Agreement Format in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவு உங்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமையும். பொதுவாக நமக்கு எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் செலவுகள் காரணமாக. யாரிடமாவது கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த சமயங்களில் நாம் பெரிய அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது. கடன் கொடுப்பவர்கள் கட்டாயம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் பாண்ட் பாத்திரத்தில் எழுதி தருமாறு சொல்வார்கள். இதனை கடன் உறுதி பாத்திரம் என்று சொல்வார்கள் அதாவது நாம் சில மாதங்களுக்குள் அல்லது சில வருடங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் வாங்கிய தொகையை திருப்பி கொடுத்து விடுவேன் என்பதன் அர்த்தமாகும். சரி இந்த பதிவில் கடன் பத்திரம் எழுதுவது எப்படி என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க..

கடன் பத்திரம் எழுதுவது எப்படி? | Kadan Pathiram in Tamil Word:

உறுதி பத்திரம் என்று சொல்லக்கூடிய கடன் பத்திரம் எழுதுவதற்கு முதலில் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் பாண்ட் பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள். அவற்றில் உங்களது உறுதி மொழியை எழுதுங்கள். உதாரணத்திற்கு கீழ் கூறப்பட்டுள்ளது போல் தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

1. நீங்க எவ்வளவு கடன் தொகை வாங்க போகிறீகளோ அந்த கடன் தொகையை பத்திரத்தின் இடதுபுற ஓரத்தில் எழுதி கொள்ளுங்கள்.

2. அதன்பிறகு நீங்கள் கடன் வாங்க இருக்கும் அந்நாளின் தேதியை பத்திரத்தின் வலதுபுறத்தில் எழுதி கொள்ளுங்கள்.

3. பிறகு கடன் உறுதி பத்திரம் என்று நடுப்பகுதியில் தலைப்பிடுங்கள்.

4. பின் அதன் கீழ் கடன் தொகையின் விபரம், உங்களுடைய விபரம், கடன் தொகையை எப்பொழுது திருப்பி கொடுப்பீர்கள் என்று விபரங்களை தெளிவாக எழுத வேண்டும்.

5. பிறகு சாட்சிகளின் கையொப்பங்களை பத்திரத்தின் இடது புறத்தில் இடவேண்டும்.

6. அதன் பிறகு ஒரு ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி கடன் வாங்குபவரின் பெயரையும் கையொப்பத்தையும் இட வேண்டும்.



கடன் பத்திரம் முறை

கடன் தொகை: ரூபாய் 1,00,000/-                                                           தேதி: XXXX 

கடன் உறுதி பத்திரம்

XXX ஆகிய நான் (உங்களுடைய முகவரி) வசித்துவருகிறேன், எனது தந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கம் YYYY என்பவரிடம் கடனாக வாங்கியுள்ளேன். இந்த தொகையை அடுத்த 6 மாதத்தில் அசல் மற்றும் அதன் வட்டியுடன் திருப்பி கொடுத்துவிடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். கடன் கொடுத்த நாள் (தேதி/மாதம்/ஆண்டு) அன்று சாட்சிகள் முன்பு கொடுக்கப்பட்டது. இந்த பணம் நான் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் சட்டரீதியாக என்னிடம் இருந்து இந்த பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

விவரங்கள்: கடன்கொடுக்கப்பட்டவரின் விவரம்

சாட்சியாளர்களின் கையொப்பங்கள்:
1. YYY
2. YYY
3. YYY

கடன் வாங்கியவரின் (பெயர்/ கையொப்பம்)
XXXX



 

காவல்துறை புகார் கடிதம் மாதிரி
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement