கரையான் பற்றிய தகவல்கள் | Karaiyan in Tamil..!
வணக்கம் பொதுநலம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று நம் பதிவில் கரையான் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் வியக்கவைக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். கரையான்கள் எப்படி வாழும் தன்மை கொண்டவைகள் என்பதை தெரிந்து கொள்வோம். கரையான்கள் நிலத்துக்கு அடியில் பல மீட்டர்களில் வலைப் பின்னலாய் பல சுரங்கப் பாதைகளைக் கொண்ட புற்றுகளை கட்டியிருக்கும். அந்த புற்றுகள் மூன்று மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கும். அந்த புற்றுகள் தரைக்கு மேலே குன்று போன்ற அமைப்பில் இருக்கும். குன்று போன்ற அமைப்பின் நடுவே தடிமனான 5 மீட்டர் உயரமுள்ள சுவர் இருக்கும். மேலும் கரையானை பற்றி தகவல்களை தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
கரையான்கள்:
ஒரு கரையான் கட்டிய புற்றில் 500 முதல் 5 லட்சம் வரை கரையான்கள் இருக்கும். இந்த கரையான்கள் 4 வகைப்படும். அவை ராஜா கரையான், ராணி கரையான், பாதுகாப்பு கரையான் மற்றும் பணிக் கரையான் என்று இருக்கும். ராஜா மற்றும் ராணி கரையான்களுக்கு மட்டும் தான் பார்வை இருக்குமாம். கரையான்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத உயிரினம் என்றே கூறலாம்.
அதுபோல பாதுகாப்பு கரையான்கள் மற்றும் பணிக் கரையான்கள் பார்வை திறன் கிடையாது. எதாவது பாதிப்புகள் ஏற்படும் போது பாதுகாப்பு கரையான்கள் தங்கள் தலைகளை சுவற்றில் மோதி அதிர்வை ஏற்படுத்தி தங்கள் இனத்திற்கு எச்சரிக்கை செய்கின்றன.
கரையான்கள் தகவல் பரிமாற்றத்திற்காக ஒரு விதமான இரசாயன மலத்தை வெளியிடுகின்றன. ஒரு ராணி கரையான் குறைந்தது 15 முதல் 25 வருடம் வரை உயிர் வாழ்கின்றன. இந்த ராணி கரையான் சிறப்பு வகையான கரையான்களை முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வரும் கரையான்களை தான் நாம் ஈசல் என்று கூறுகிறோம். ஈசலை நாம் ஒரு நாள் உயிரி என்று கூறுவோம். ஆனால் ஈசலில் உயிர்ப்பிழைத்த பூச்சிகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை காரணம் தெரியுமா..? |
இந்த கரையான்கள் மண்ணில் வாழ்ந்தாலும் தங்களையும் தங்களை சுற்றி உள்ள பகுதிகளையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பண்பை கொண்டுள்ளன. கரையான்கள் அவற்றின் புற்றுகளை பாதுகாக்கவே சுத்தமாக இருக்கின்றன என்று அறிவியல் ஆய்வுகளில் கூறப்படுகிறது. கரையான்கள் 24 மணி நேரமும் தங்கள் புற்றை கட்டுவதில் அதிகளவு ஆர்வம் உடையவைகளாக காணப்படுகின்றன.
இந்த கரையான்கள் எந்த ஒரு மரப் பொருளையும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடும் தன்மையை கொண்டுள்ளது. எந்த ஒரு மரப் பொருளையும் அளிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த கரையான்களால் வருடத்திற்கு பல மில்லியன் அளவிலான பொருட்கள் சேதமடைகின்றன என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
கரையான்களும் எறும்புகளும் ஓன்று போல இருந்தாலும் கரையான்களின் ஜென்ம விரோதி எறும்புகள் தான். கரையான்களுக்கு எதிரியாகவும் போட்டியாளராகவும் எறும்புகள் இருக்கின்றன. இவை இரண்டிற்கும் ஒரு பெரிய போரே நடக்குமாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |