தூக்கத்தில் குறட்டை
பொதுவாக ஒரு மனிதனுக்கு உணவு, உடை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தூக்கமும் முக்கியமான ஒன்று. அப்படி நாம் சரியாக தூங்க வில்லை என்றால் நமது உடலுக்கு அது நன்மை கிடையாது. நாம் அசந்து நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டை வரும். இந்த மாதிரி குறட்டை வருவதும் கூட எல்லோருக்கும் வருவது இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் குறட்டை வருகிறது. இதையும் கூட மறுநாள் காலையில் நமக்கு அருகில் படுத்து உறங்கியவர் சொன்னால் தான் நமக்கு குறட்டை வருகிறது என்பதே தெரிய வரும். அந்த நேரத்தில் நமக்கு தோன்றும் ஏன் நமக்கு மட்டும் குறட்டை வருகிறது நமக்கு அருகில் உறங்கியவருக்கு குறட்டை வரவில்லை என்ன காரணம் என்று சிலர் யோசிப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் ஏன் சிலருக்கு மட்டும் குறட்டை வருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?
ஏன் சிலர் குறட்டை விடுகிறார்கள் தெரியுமா..?
நாம் தினமும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறோம் என்றால் அதற்கு நாம் சுவாசிக்கும் காற்றும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் அன்றாட சுவாசிக்கும் காற்றினை மூக்கு, தொண்டை, வாய் மற்றும் மூச்சு குழாய் ஆகியவற்றின் வழியாக நுரையீரலுக்கு சென்றடைகிறது.
இது மாதிரி சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு செல்லும் போது எந்த நபருக்கு இடையில் தடை ஏற்படுகிறதோ அதுவே அவருக்கு இரவில் குறட்டையாக வருகிறது.அதுமட்டும் இல்லாமல் இரவில் எதனால் குறட்டை வருகிறது என்றால் இரவில் நாம் தூங்கும் போது தான் நம்முடைய தொண்டையில் உள்ள தசைகள் தளர்வு அடைந்து மூச்சுக்குழாய்கள் குறுகள் அடைகின்றது.
இது போன்ற நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ள காற்று நுரையீரலுக்கு செல்ல முயலுவதால் இரவு நேரத்தில் குறட்டை வருகிறது. இதுவே குறட்டை வருவதற்கான காரணமாகவும் இருக்கிறது.
சிலருக்கு மட்டும் குறட்டை வருவதற்கு இரண்டாவது காரணமும் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் நாம் இரவில் வானத்தை நோக்கி படுத்து உறங்கும் போது நமது நாக்கு தொண்டையின் உள்ளே சென்று விடும். இது போன்ற நேரத்திலும் சிலருக்கு குறட்டை வரும்.
இருமல், சளி, மூக்கடைப்பு மற்றும் தும்மல் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும் கூட அது குறட்டை வருவதற்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது.
இதையும் படியுங்கள்⇒ விக்கல் எதனால் வருகிறது.? அதனை நிறுத்துவது எப்படி.?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |