பெருதேயகிழங்கு பற்றிய தகவல்..! | Maca Root in Tamil

பெருதேயகிழங்கு வேர் பற்றிய தகவல் | Maca Root in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நேயர்களே..! இன்றைய பதிவில் பெருதேயகிழங்கு பற்றிய சில தகவல்களை பற்றி தான். நாம் அனைவருக்கும் இந்த பெருதேயகிழங்கு பற்றி தெரிந்திருக்காது. இந்த பெருதேயகிழங்கு பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் பல நோய்களுக்கு மருந்தாக நமது முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட பெருதேயகிழங்கு வேர் பற்றிய தகவல்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

Maca Root in Tamil

maca root benefits in tamil

பெருதேயகிழங்கு என்பது லெபிடியம் மெய்னி என அழைக்கப்படும் பிராசிகேசே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இந்த கிழங்கு ஒரு வேர் காய்கறியாகும். இது பெரு நாட்டினை பிறப்பிடமாக கொண்டுள்ளது.

இந்த கிழங்கு பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மருத்துவத்தில் பொடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மக்கா வேர் முள்ளங்கிகளுடன் நெருக்கமான தொடர்புடையது. மேலும் இந்த கிழங்கு தாவரத்தின் மிக முக்கியமான மருத்துவகுணம் கொண்ட பகுதியாக இருப்பது அதன் வேர் தான்.

இத்தாவரத்தின் மிக முக்கியமான பகுதியாக உள்ள வேர்கள் ஹைபோகோடைல் மற்றும் டேப்ரூட்டிலிருந்து உருவாகின்றது. மேலும் இது  தலைகீழ் பேரிக்காய் வடிவத்தில் இருக்கும்.

பயன்கள் :

  • பாலியல் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கிறது.
  • கருவுறுதலுக்கு மிக முக்கியமான பங்கு அளிக்கிறது.
  • எலும்புகளின் ஆரோக்கித்தை மேம்படுத்துகின்றது.
  • மனஅழுத்தத்தை குறைக்கிறது.
  • ஹோமியோஸ்டாஸிஸ் அல்லது நீர்ச்சமநிலையை ஊக்குவிக்கும்.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்=> பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil