கானாங்கெளுத்தி மீன் பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கானாங்கெளுத்தி மீன் | Mackerel Fish in Tamil..! 

வணக்கம் நண்பர்களே… இன்று நம் பதிவில் கானாங்கெளுத்தி மீன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளப்போகிறோம். உலகெங்கும் பல வகையான மீன் வகைகள் உள்ளன. அனைத்து நாட்டு மக்களும் மீனை விரும்பி சாப்பிடுகிறார்கள். கானாங்கெளுத்தி மீன்களிலேயே 10 க்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. கானாங்கெளுத்தி மீன் பற்றிய மேலும் பல தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கானாங்கெளுத்தி மீன் எப்படி இருக்கும்:

தமிழ்நாட்டில் 10 க்கும் மேற்பட்ட கானாங்கெளுத்தி மீன்கள் உள்ளன. இந்த கானாங்கெளுத்தி மீன்கள் பொதுவாக பாரை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மீன்கள் ஆழ்கடலில் வாழும் வெவ்வேறு வகை மீன்கள் ஆகும். இந்த மீன்கள் ஸ்கோம்பிரிடே என்ற குடும்பத்தை சேர்ந்த மீன்கள் ஆகும். இந்த மீன்கள் வெப்ப மண்டல கடல்களில் அதிகளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்த வகை மீன்கள் கடலோர பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

இந்த மீன்கள் பளப்பளப்பானதாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும், அளவில் பெரியதாகவும் தடிமனாகவும் இருக்கும். சில கானாங்கெளுத்தி மீன்களின் வயிறு வெள்ளி நிறமாக இருக்கும். மற்றும் சில மீன்கள் மஞ்சள் நிறம் மற்றும் சாம்பல் நிற கோடுகளும் புள்ளிகளுடனும் காணப்படும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

கானாங்கெளுத்தி மீன் வரலாறு:

இந்த மீன் பண்டைய ரோமானியர்களின் மிகசிறந்த உணவுப்பொருளாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மற்ற இறைச்சிகளை விட இந்த கானாங்கெளுத்தி மீன்கள் மிகவும் விலை உயர்ந்து காணப்பட்டன. பலர் இந்த மீன்களை குளங்களில் இனப்பெருக்கம் செய்ய முயன்றனர். லூசியஸ் மொரேனா என்பவர் மீன்களுக்காக ஓரு சிறந்த குளம் ஒன்றை கட்டினார்.

கானாங்கெளுத்தி மீன் வகைகள்: 

 1. இருப்பாரை
 2. கருமூஞ்சிப்பாரை
 3. ஒட்டகப்பாரை
 4. மொசிங்கிப்பாறை
 5. ஒட்டாம்பாரை
 6. நண்ணைப்பாரை
 7. நாமப்பாறை
 8. பில்லிப்பாரை
 9. தங்கப்பாரை
 10. செம்பாரை
 11. வரிப்பாரை
 12. மண்டைக்காறல்
 13. சுதுப்புநாங்காறல்
 14. கொமாரப்பாறை
 15. கருக்காப்பாரை
 16. கண்ணிப்பாரை
 17. குளும்பாறை

கானாங்கெளுத்தி மீன் பயன்கள்:

கானாங்கெளுத்தி மீனில் நல்ல வளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு சத்துக்களான மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி என்ற அமிலங்கள் உள்ளன. இந்த கானாங்கெளுத்தி மீன்கள் ஆரோக்கியமானவை என்று கூறப்படுகின்றன. இந்த மீன்களில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வாரம் ஒரு முறை கானாங்கெளுத்தி மீனை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோடீன் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த கானாங்கெளுத்தி மீன்கள் சாப்பிடுவதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மேலும் இது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள உதவுகிறது. இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், சர்க்கரை நோயின் அபாயத்தை தடுக்கலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement