மரணம் எப்படி நிகழ்கிறது
நண்பர்களே வணக்கம் இன்று நாம் ஒரு மனிதனின் மரணத்தை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக ஓர் உயிர் இந்த பூமியை அடையும் போது இன்னொரு உயிர் இந்த பூமியை விட்டு பிரிகிறது என்பார்கள். அது உண்மை என்றால் அது சொல்லமுடியாது அது நம்மை படைத்தவனுக்கு தான் தெரியும். ஒரு மனிதன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தை பார்த்து அதற்கு என்ன வழி என்று அனைத்து விஷயத்தையும் கேட்டு தெரிந்துகொள்வோம்.
அதற்கென்று பரிகாரம் செய்து வாழ்வில் முன்னேறுவார்கள். அதே போல் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற பேச்சி வார்த்தை வந்தால் போதும். உடனே நாம் செல்வது ஜாதகத்தை பார்க்கத்தான் அதில் வரும் பலன்கள் படி நடந்துகொள்வார்கள். ஆனால் யாருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ஒரு மனிதனுக்கு எப்போது மரணம் ஏற்படும் என்பதை ஜாதகத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..!
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..? |
மனிதன் பூமிக்கு வர காரணம்:
பொதுவாக ஒரு மனிதன் இந்த பூமிக்கு வருகிறான் என்றான் அதற்கு ஆயிரம் காரணம் அது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.
ஒரு மனிதனின் உடலுக்கு ஒரே உயிரை கடவுள் தருகிறார் என்றால் அந்த உடலும் உயிரானது இந்த பூமிக்கு போன ஜென்மத்தில் செய்த கர்ம வினையை தீர்ப்பதற்காக மட்டும் அந்த உயிர் உடலை சேரும்.
அதன் பின் நீங்கள் வாழும் காலத்தில் அனுபவித்த அனைத்தும் கர்மாவின் நிகழ்வுகளாக இருக்கும்.
நீங்கள் இந்த உலகத்தை விட்டு எப்போதும் மரணத்தை அடைவீர்கள் என்றால் போன ஜென்மத்தில் நீங்கள் செய்த கர்ம வினை கழிந்த பிறகே உங்களுக்கு மரணம் ஏற்படும்.
நீங்கள் ஒரு புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் செய்தீர்கள் என்றால் உங்களின் கர்ம வினை கழிந்து போகும். அதன் மூலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தகுதியற்று போய்விடுவீர்கள்.
ஜோதிடத்தில் மரண நேரத்தை எப்படி கண்டுபிடிப்பது:
ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டம் இருக்கும் அதனை சரியாக கணித்து உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் மரணத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு ஒரு கட்டம் உள்ளது அதில் பாதகாதிபதி நிலை அஷ்டமாதிபதி நிலை என்று இரண்டு கட்டம் இருக்கும் அதில் உள்ள இரண்டு கட்டமும் தனி தனியாக மாறி வரும்.
அந்த கட்டகங்களில் எப்போது பாதகாதிபதியும், அஷ்டமாதிபதியும் சஷ்டாஷ்டானமாக ஒன்றாகி அப்போது நிச்சயம் மரணம் உங்களை அடைந்துவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |