கனவில் கல்யாணம் நடந்தால் என்ன பலன்..! Marriage Kanavu Palangal in Tamil..!
அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக எல்லா கனவுகளுக்கும் பலன் உள்ளது என்று நாம் சொல்லிவிட முடியாது. இருப்பினும் குறிப்பிட்ட கனவுகளுக்கு அதாவது நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது வரும் கனவுகளுக்கு பலன் உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு கனவு பலன்களை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இந்த பதிவில் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கனவில் பணம் கண்டால் என்ன பலன்? |
திருமண கனவு பலன்கள்
1. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்: கனவில் உங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் தங்களுக்கு ஏதாவது வியாதியினால் துன்பம் ஏற்படும் என்று அர்த்தமாகும்.
2. நமக்கே திருமணம் நடப்பது போல் கனவு: பொதுவாக திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மனம் கட்டுப்படுத்தல், தற்காலிகமாக திட்டமிடுதல், சிறை செல்லுதல், கவலை, மன அழுத்தம், மன தளர்ச்சி போன்றவற்றை குறிக்கும்.
3. தங்களுடைய திருமணம் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் நடப்பது போல் கனவு கண்டால் முந்திய காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நமக்கு ஞாபகப்படுத்துவதாக சில சம்பவங்கள் நிகழப்போவதாக அறியலாம்.
4. தங்களுக்கு தெரிந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஒருவர் கனவு கண்டால் தன் வருங்கால மனைவிக்கு நல்ல கணவராக இருப்பார் என்று அர்த்தமாகும்.
5.இதுவரை தாங்கள் அறிந்திடாத ஒரு பெண்ணை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் அவளை கனவில் பார்க்கமுடியாத நிலை வந்தால், அது அவருடைய இறப்பை குறிக்கலாம் அல்லது தன் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடிப்போவதையும் குறிக்கும்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! |
6. திருமண கனவு பலன்கள்: நோய்வாய் பட்ட பெண் அவருடைய கனவில் இதுவரை அறிந்திடாத ஒரு ஆணை திருமணம் செய்வதாக கனவு கண்டால் அந்த பெண் அந்த நோயினால் மரணம் அடைவாள் என்று அர்த்தமாகும்.
7.கனவு காண்பவர் ஒரு பாரம்பரியமான திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நன் மதிப்பும், புதிய வேலையும் கிடைக்கும்.
8. திருமணம் செய்து கொண்ட பெண் இறந்தது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்தும், கஷ்ப்பட்டு உழைத்தும் கூட அவர்களுக்கு மேலும் மேலும் கஷ்டமும் துன்பமும் நிகழும் என்று அர்த்தமாகும்.
9. கர்ப்பமடைந்த பெண் திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டால் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தமாகும்.
10. திருமணம் செய்து கொண்ட ஆண் அல்லது பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிப்பை உணர்த்தும்.
11. திருமணம் செய்வதுபோல் கனவு காண்பது கண்டங்களை குறிக்கிறது. எனவே பணப்புழக்கத்திலும், வாகன பயணங்களிலும் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..! |
இதுபோன்று கனவு பலன் (kanavu palan) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Kanavu Palan |