ஊர் திருவிழா அழைப்பிதழ் கடிதம் | Oor Thiruvizha Kaditham in Tamil

Advertisement

ஊர் திருவிழாவிற்கு வருமாறு நண்பனுக்கு கடிதம் எழுதுக

திருவிழா என்பது ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடவும், தங்களின் இறைபக்தியையும், ஊரின் சிறப்பையும் பேணிக் காத்திடவும் உருவாக்கப்பட்டதாகும். அவ்வாறு ஊரின் தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழா நடைபெறும் தேதிகளை முடிவு செய்வர். திருவிழாவிற்கு முதல்நாள் காப்பு கட்டுதல் விழா நடைபெறும். காப்பு கட்டுதல் முடிந்ததும் திருவிழா நிகழ்ச்சியானது நடைபெறுவது வழக்கம். இந்த பதிவில் ஊர் திருவிழாவிற்கு வருமாறு உறவினருக்கு கடிதம் எப்படி எழுதுவது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

முறையான கடிதம் எழுதுவது எப்படி?

ஊர் திருவிழாவிற்கு வருமாறு நண்பனுக்கு கடிதம் எழுதுதல்:

 

தெரு பெயர்
ஊர்
தேதி

அன்பிற்கினிய அத்தைக்கு

தங்கள் மருமகள் (பெயர்) எழுதும் மடல். நலம். நாடுவதும் அதுவே. நம் ஊரில் பேச்சியம்மன் கோவில் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. திருவிழாவில் பல போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறுவடை நம் ஊரே கொண்டாடி மகிழும் இவ்விழாவில் நீங்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.

உங்கள் அன்பு மருமகள்
xxx

உரைமேலிட்ட முகவரி

xxxxx
தெரு பெயர்
ஊர்

தொடர்புடைய கடிதங்கள்
காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி?
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement