‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ இதற்கு அர்த்தம் தெரியுமா..?

Ooran Pillaiyai Ooti Valarthal Than Pillai Thaane Valarum 

Ooran Pillaiyai Ooti Valarthal Than Pillai Thaane Valarum 

அன்பு உள்ளம் கொண்ட உறவுகளுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் கூறப் போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் தமிழ் மொழியில் எத்தனையோ பழமொழிகள் இருக்கின்றன.

அதில் ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற பழமொழி இருக்கிறது. இந்த பழமொழியை சிலர் கூற நாம் கேட்டிருப்போம். அதுபோல இந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் இந்த பழமொழிக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ – விளக்கம்: 

Ooran Pillaiyai Ooti Valarthal Than Pillai Thaane Valarum 

இந்த பழமொழியை நாம் பள்ளியில் படிக்கும் போது கற்றிருப்போம். அதுபோல இதை கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகம் இந்த பழமொழியை கூறுவார்கள். இருந்தாலும் இந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று இன்றும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலர் இந்த பழமொழிக்கு, மற்ற குழந்தைகளை நாம் நன்றாக வளர்த்தால் நம்முடைய குழந்தை நன்றாக வளரும் என்று அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது, யாரும் இல்லாத குழந்தைகளை நாம் கவனித்து நன்றாக வளர்த்தால், நம்முடைய குழந்தைகள் இறைவனின் அருளாலும், நாம் செய்த புண்ணியத்தாலும் சிறப்பாக வாழும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இது அந்த பழமொழிக்கான அர்த்தம் கிடையாது. அந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தத்தை பற்றி பார்ப்போம்.

கர்ப்பகாலத்தில் இருக்கும் மனைவியை கணவன் பேணிக் காக்க வேண்டும். அதற்காக தான் இந்த பழமொழியை கூறினார்கள்.

அதாவது, ஊரான் பிள்ளை என்பது மனைவியை குறிக்கிறது. அதுபோல தன் பிள்ளை என்பது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை குறிக்கிறது. 

 வேறொருவரின் மகளாகிய, கர்ப்பமாக இருக்கும் மனைவியை நாம் பேணிக்காத்து வளர்த்தால் மனைவியின் வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தை தானாக வளரும் என்பதை தான் முன்னோர்கள் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று சொன்னார்கள்.  

இது தான் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் ஆகும்.

“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil