பண்புத்தொகை எடுத்துக்காட்டு | Panbu Thogai Examples in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள். தமிழ் இலக்கணத்தில் வரக்கூடிய ஒன்று தான் பண்புத்தொகை. ஒரு சொல்லின் குணத்தையும் பண்பையும் உணர்த்துவதை பண்புத்தொகை என்று சொல்லப்படுகிறது. பண்புத்தொகை என்பது ஆகிய, என்னும் பண்பு உறுப்பு மறைந்து நிற்க பண்புப்பெயரோடு பண்புப்பெயர் தொடர்வது. சரி இந்த பதிவில் பண்புத்தொகை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்வோமா?
பண்புத்தொகை என்றால் என்ன?
பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.
பண்புத்தொகை எடுத்துக்காட்டு:
- செந்தாமரை – வண்ணப் பண்புத்தொகை
- வட்டநிலா – வடிவப் பண்புத்தொகை
- முத்தமிழ் – அளவுப் பண்புத்தொகை
- இன்சொல் – சுவைப் பண்புத்தொகை
மேல் கூறப்பட்டுள்ள சொற்கள் விரியும் போது செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என்று விரிவடைகிறது. அதாவது சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் “மை” விகுதி பெற்றுவரும் சொற்கள் அனைத்துமே பண்புத்தொகையாகும்.
இன்னுயிர் இந்த சொல்லை பிரிக்கும் போது இனிமை + உயிர் என பிரியும். நிலைமொழியில் “மை” விகுதி சேர்ந்து வந்திருப்பதினால். இந்த சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.
பண்புத்தொகை உதாரணம்:
- பைங்கூழ் – பசுமை+கூல் = பண்புத்தொகை
- செவ்வேள் – செம்மை + வேள் = பண்புத்தொகை
- செந்தமிழ் – செம்மை + தமிழ் = பண்புத்தொகை
- நெடுந்தேர் – நெடுமை + தேர் = பண்புத்தொகை
பண்புத்தொகை விளக்கம்:
பண்புத்தொகை என்பது நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதாவது ஒரு பண்பு தொட்டு நிற்கும் ஒரு பெயர்ச்சொல். எடுத்துக்காட்டாக செந்தாமரை என்பது செம்மை நிறம் உள்ள தாமரை என்று பொருள். இதில் செம்மை என்னும் பண்பு தொட்டு செந்தாமரை என்று உருவானதால் இவ்வகைப் பெயர்ச்சொல்லுக்குப் பண்புத்தொகை என்று பெயர்.
செந்தாமரை – இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம். பண்புத் தொகையில் “மை’ எனும் விகுதியும் “ஆகிய’ எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.
பண்புத்தொகை சொற்கள்:
இலக்கணம் குறிப்புப்படி சில பண்புத்தொகை சொற்களை கீழ் பார்ப்போம்.
- செந்தமிழ்
- நெடுந்தேர்
- மெல்லடி
- கருவிழி
- குறுநடை
- பெருமாள்
- நெடும்படை
- நெடுந்திரை
- நற்றூண்
- நல்லுயிர்
- நல்லருள்
- நற்செயல்
தொடர்புடைய பதிவுகள் – லிங்கை கிளிக் செய்து படித்து பாருங்கள் |
இலக்கணம் என்றால் என்ன? |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
வினா எத்தனை வகைப்படும்? |
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? |
பதம் எத்தனை வகைகள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |