பத்துப்பாட்டு நூல்கள் | Pathupattu Noolgal Asiriyar Peyar
Pathupattu Noolgal:- பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்க இலக்கியம் என்பது கிறிஸ்துக்கு முந்தைய காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை இந்த சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் எடுத்து கூறுகின்றது. சங்க இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ற பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி இவை அனைத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள் ஆகும். குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு இவை அனைத்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள் ஆகும். நெடுநல்வாடை என்பது அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் பற்றிய நூலாகும். சரி இந்த பதிவில் பத்துப்பாட்டு நூல்கள் ஆசிரியர் பெயர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Pathupattu Noolgal Names and Authors in Tamil:
திருமுருகாற்றுப்படை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
திருமுருகாற்றுப்படை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
நக்கீரர் |
பாடல் அடி |
317 |
பாட்டுடைத் தலைவன் |
முருகன் |
பொருநராற்றுப்படை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் / Pathupattu Noolgal Name |
பொருநராற்றுப்படை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
முடத்தாமக் கண்ணியார் |
பாடல் அடி |
248 |
பாட்டுடைத் தலைவன் |
சோழன் கரிகாலன் |
சிறுபாணாற்றுப்படை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
சிறுபாணாற்றுப்படை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
நல்லூர் நத்தத்தனார் |
பாடல் அடி |
269 |
பாட்டுடைத் தலைவன் |
நல்லியக்கோடன் |
பெரும்பாணாற்றுப்படை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
பெரும்பாணாற்றுப்படை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
பாடல் அடி |
500 |
பாட்டுடைத் தலைவன் |
தொண்டைமான் இளந்திரையன் |
மலைபடுகடாம்:-
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
மலைபடுகடாம் |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
பெருங்கௌசிகனார் |
பாடல் அடி |
583 |
பாட்டுடைத் தலைவன் |
நன்னன் சேய் நன்னன் |
குறிஞ்சிப்பாட்டு:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
குறிஞ்சிப்பாட்டு |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
கபிலர் |
பாடல் அடி |
261 |
பாட்டுடைத் தலைவன் |
ஆரிய அரசன் பிரகதத்தன் |
முல்லைப்பாட்டு:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
முல்லைப்பாட்டு |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
நப்பூதனார் |
பாடல் அடி |
103 |
பாட்டுடைத் தலைவன் |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
பட்டினப்பாலை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
பட்டினப்பாலை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
பாடல் அடி |
301 |
பாட்டுடைத் தலைவன் |
சோழன் கரிகாலன் |
நெடுநல்வாடை:
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
நெடுநல்வாடை |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
நக்கீரர் |
பாடல் அடி |
188 |
பாட்டுடைத் தலைவன் |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் |
மதுரைக்காஞ்சி |
பத்துப்பாட்டு ஆசிரியர்கள் |
மாங்குடி மருதனார் |
பாடல் அடி |
782 |
பாட்டுடைத் தலைவன் |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |