போலீஸ் கனவில் வந்தால் என்ன பலன்..!

police kanavu palangal in tamil

Police Kanavu Palangal in Tamil

கனவுகள் பற்றி பலவகையில், பலவிதமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தாலும், சில வகையான கனவுகள் நமக்கு வரும் போது, இனம் புரியாத பயமும், வருத்தமும் ஏற்படுவது இயற்கை தான். அந்த வகையில் போலீஸ் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..

போலீஸ் கனவில் வந்தால் என்ன பலன்:-

உங்களுடைய கனவில் காவல் நிலையம், கோர்ட், இவைகள் வந்தால், நீங்கள் செய்யப்போகும் வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தில் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

போலீஸ் (காவல் அதிகாரி) என்னை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

காவல் அதிகாரி உங்களை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் மனதிற்கு விருப்பம் இல்லாத சில செயல்களில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும்.

போலீஸ் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தங்களுடைய கனவில் போலீஸ் துரத்துவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? நீங்கள் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தமாகும். இது போன்ற கனவுகள் தங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால்? எல்லை தெய்வங்களை வழிபட்டுவர இது போன்ற கெட்ட கனவுகள் வருவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

Police Kanavu Palangal in Tamil:-

உங்களுடைய கனவில் ஒரு குற்றத்தில் நீங்கள் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் உங்களை கைது செய்ய முயன்றால், உங்கள் வாழ்க்கையில் கடினமான, ஆபத்தான நேரம் வரும். கைது செய்வதிலிருந்து விடுவிப்பது என்பது உங்கள் விவகாரங்களின் உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது.

போலீஸ் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்களுடைய கனவில் ஒரு போலீஸ்காரரைப் பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு  அர்த்தம் தெரியுமா? அதாவது ஒரு உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்